Home » Archives for கோகிலா » Page 10

Author - கோகிலா

Avatar photo

உலகம்

அண்ணன் உடையான், அழிப்பதற்கு அஞ்சான்!

குழந்தைகள் மருத்துவ உபகரணங்களுடன் இணைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைப் படுக்கையிலேயே இறந்து உடல் அழுகுகிற காட்சியைப் படம்பிடித்து வெளியுலகுக்குக் காட்டினார் செய்தியாளர் மஹமத் பாலுஷா. நவம்பர் பத்தாம் தேதி இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸா, அல் நசிர் மருத்துவமனையில் இருந்தவர்களைக் கட்டாயப்படுத்தி...

Read More
தமிழ்நாடு

நாளும் தொடரும் நாய்ப் பிரச்னை

தடுப்பூசி மருந்து மாஃபியாக்களின் வேலை, நாய்களிடம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய வைரஸ் பரவல் இருக்கிறது, வழக்கத்தைவிட மூர்க்கமாகக் கடிக்கும்படி யாரோ எதையோ கொடுத்து நாய்களை மாற்றிவிட்டார்கள்- இவையெல்லாம் சமீபத்திய நாய்க்கடிச் செய்திகளால் சமூக வலைத்தளங்களில் நிறைந்திருக்கும் கான்ஸ்பிரசி தியரிகளில்...

Read More
உலகம்

இடைவேளைக்குப் பிறகு….

ஒரு வாரம் இடைவெளி கொடுத்து 110 பணயக் கைதிகளை மீட்டது இஸ்ரேல். பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டவரும். 240 பாலஸ்தீனியர்கள் விடுதலை ஆனார்கள். ஹமாஸிடம் மீதம் இருக்கும் 140 பணயக் கைதிகள் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் ஆண்கள். ஒருவார இடைவெளிக்குப் பிறகு இஸ்ரேல் தொடங்கிய தாங்குதல்...

Read More
உலகம்

இடைக்காலப் போர் நிறுத்தம்

தேர்வுக்கூடத்தி்ல் டீச்சரிடம் பேப்பர்களை ஒப்படைக்கக் கடைசி ஐந்து நிமிடம் என்று மணி அடித்ததும் இன்னும் தீவிரமாக எழுதுவார்கள் சில மாணவர்கள். அப்படி போரில் ஒரு இடைவெளி ஒப்பந்தம் முடிவானதும் அது தொடங்கும் நேரத்துக்குச் சிலமணி நேரம் முன்பு கூட ஐநா பள்ளிக்கூட த்தின் மீது குண்டு வீசி 27 பேரைக் கொன்றது...

Read More
உலகம்

ஆதரவும் அதிகம், அவதிகளும் அதிகம்!

தாக்குதல் தொடங்கி நாற்பது நாள் வரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பேற்கவில்லை என்ற கோபம் இஸ்ரேலில் உள்ளது. முதலில் பதிலடி பிறகு விசாரணை என்று நெதன்யாகு சொல்லிக் கொண்டிருந்தார். காஸாவில் பெரும்பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் நெதன்யாகு பதவி விலக வேண்டும்...

Read More
உலகம்

உலகையே எதிர்ப்போம்!

காஸா பகுதியில் தாக்குதலுக்கு முன்பு உடனே வெளியேறும்படி எச்சரிக்கும் பேம்ப்லட்களை விமானம் மூலம் தூவி தாங்கள் விதிப்படி நடப்பதாக காட்டிக் கொள்ள முயல்கிறது இஸ்ரேல். எங்கும் பாதுகாப்பில்லை. எல்லா இடத்திலும் குண்டு விழுகிறது என்பதே உண்மை. “வெளியேறாவிட்டால் நீங்களும் தீவிரவாதத்துக்கு துணை நின்றவர்களாகக்...

Read More
உலகம்

பின்னால் போகாதே, முன்னால் போ!

ஹிட்லர், யூதர்கள் மீது நிகழ்த்திய கொடூரங்கள் ஈடிணை சொல்ல முடியாதவை என்ற நிலையை யூதர்கள் மாற்றியெழுதக்கூடும். இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் மீது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இனப்படுகொலையில் புதிய உச்சங்களைத் தொடுகிறது. மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், பள்ளிகள், அகதி முகாம்கள் என எந்த வரையறையும் இன்றிக்...

Read More
உலகம்

நதியிலிருந்து கடல் வரை

கை நசுங்கி கால் உடைந்த நிலையில் இடிபாடுகளுக்கிடையில் இருந்த ரணீம் ஹிஜாஜி எட்டு மாதக் கருவைத் தன் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ரணீமுடன் வசித்த அவர் குடும்பத்தினர் ஏழு பேர் இறந்துவிட்டனர். கட்டடக் குவியல்களின் உள்ளே சிக்கியிருந்த ரணீமை அவர் கணவர் கண்டுபிடித்தபோது...

Read More
உலகம்

ஹமாஸ்-இஸ்ரேல் போர்: ரத்தமும் தக்காளிச் சட்னியும்

காஸாவில் தற்போதைய தாக்குதல்களில் இறந்துபோன குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. பச்சிளம் குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மிச்சமிருக்கும் இடத்தில்தான் ஆண்களும் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளும் இருக்கிறார்கள். இதனால்தான் குழந்தைகள்...

Read More
உலகம்

சொந்த நாட்டின் அகதிகள்

இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டி இங்கே வாரணாசி கங்கைக் கரையில் சிறப்பு வழிபாடு நடந்தது. போர் ஆரம்பித்த பிறகு பலி எண்ணிக்கையைத் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த பி.பி.சி. செய்தி இப்படி இருக்கிறது. “இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 500 பேர் இறந்துவிட்டார்கள். ஹமாஸ் தாக்கியதில் இஸ்ரேலில் 700...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!