80. பர்ணமணி வித்ருவின் கோட்டைக்குள் இலக்கென்று ஏதுமின்றி நடந்துகொண்டிருந்தேன். வீடுகள், பண்டகசாலைகள், வைத்தியசாலை, உடற்பயிற்சித் திடல், ஆடல் அரங்கங்கள் என்று அடுத்தடுத்து ஏதேதோ கண்ணில் பட்டு நகர்ந்துகொண்டே இருந்தன. தலைக்கட்டு அணிந்த ஆண்களும் முக்காடிட்ட பெண்களும் சாரி சாரியாகப் போய்...
Author - பா. ராகவன்
79. சாபம் வெற்றி என்று எதையும் நினைக்கத் தெரியாதவனுக்குத் தோல்வி என்ற ஒன்றனைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லை. நான் வெற்றியை எண்ணியவனல்லன். ஆனால் தோல்வி எப்படிப்பட்டது என்பதை அன்று கண்டேன். குத்சனின் மீது நான் கொண்டிருந்தது அன்பல்ல. அனுதாபமல்ல. இரக்கமல்ல. மதிப்பல்ல. வேறெதுவுமல்ல. நம்பிக்கை...
78. குறுவாள் அகங்காரம் சீண்டப்படும்போது மனித குலம் சிந்திக்கத் தவறுகிறது. சிந்தனை பிசகும் மனம் மிருக குணம் கொள்கிறது. கொன்று தின்பதொன்றே மிருகத்தின் தருமம். மிருகத்தின் தருமத்தை மனித குலம் ஏற்கும்போது அகங்காரம் தணிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் மிருகமான தருணத்தின் அவலத்தைக் காலமெல்லாம் சுமந்துதான் தீர...
77. பிராயச்சித்தம் அவன் அறியாவிடினும் அவன் ஒரு முனி என்று நான் நம்பினேன். என் நம்பிக்கை உணர்ச்சிகளினால் உருவேற்றப்பட்டதல்ல. நான் உணர்ச்சியற்றவன். மிகப்பல சம்வத்சரங்களுக்கு முன்னர் சிறுவனாக அவன் தனது தாயுடன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தபோது முதல் முதலில் அவனைத் தனித்துச் சந்திக்கும் தருணம் எனக்கு...
76. இனப் படுகொலை மந்திராலோசனை மண்டபத்துக்குள் விஸ்வபதி நுழையும் முன்புதான் வித்ருவின் கோட்டைக் கதவுகளை இழுத்து மூடச் சொல்லி உத்தரவிட்டிருந்தார். அதிகாலை நடந்தவற்றின் விவரமறியாத பலர் அதற்குள் கோட்டையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தார்கள். அதைப் போலவே கோட்டைக்கு வெளியிலிருந்தும் பலர் உள்ளே...
75. சம்ஹாரம் ஊழிக்கனல் உருத் திரண்டு நடந்து வருவது போலிருந்தது அவனது தோற்றம். சிரம் தொடங்கித் தோள்கள் வரை நீண்டு, காற்றில் பறந்தாடிய அடர்ந்து நீண்ட ரோமங்களும் பேரண்டத்தைப் பிளந்துவிடும் கூர்மையுடன் இமைக்காது நோக்கிய விழிகளும் மேரு அதிர்ந்து அடங்குவது போல அவன் எடுத்து வைத்த உறுதியான அடிகளும் அதன்...
74. மூன்றாவது வழி மனித குலம் தோன்றிய நாளாகத் துரத்தும் வினா ஒன்றுண்டு. துன்பங்கள் ஏன் உண்டாகின்றன? இன்பமும் துன்பமும் சிந்திப்பதால் வருபவை. இன்பம் எப்போதும் வேண்டியிருப்பதால் சிந்திக்காதிருப்பதில்லை. சிந்திக்காதிருக்க முடியாதென்பதால் துன்பங்களைத் தவிர்க்க முடிவதில்லை. எய்த சரம் எதிலாவது சென்று...
73. முந்நூறு கோமேதகங்கள் வித்ருவில் அவரை அறியாதவர்கள் யாருமில்லை. சத்திரியர்களின் குலபதியென மதிக்கப்பட்ட அவர் பெயர் மன்வந்த்ரன். ராஜனின் மந்திராலோசனைக் குழுவில் ஒருவராக நெடுங்காலமாகக் கடமையாற்றிக்கொண்டிருந்தவர். வித்ருவின் புரத்துக்கு உள்ளே ராஜனின் மாளிகை இருந்த வீதிக்கு நான்கு வீதிகள் தள்ளி அவரது...
71. உதவாதவன் அஜிகர்த்தனின் தந்திரோபாயங்கள் எதுவும் தன்னை வீழ்த்தாததன் காரணத்தைக் குத்சன் என்னிடம் கேட்க விரும்பினான். நான் அவனுக்கு பதிலளிப்பதில்லை என்பதால் நேரடியாக அவனே கேட்காமல் அவனது பிதாவிடம் சொல்லிக் கேட்கச் சொன்னான். நான் அவனிடம் உண்மையைச் சொன்னேன். ‘நான் உன் மகனுக்கு எந்த உதவியும்...
70. தெய்வம் தொழான் ‘உன்னைத் தாக்கவும் முடியவில்லை; வீழ்த்தவும் முடியவில்லை என்பது வியப்பாக உள்ளது. நீ ஏன் உன்னைச் சரியாக அறிமுகப்படுத்திக்கொள்ளக் கூடாது?’ என்று அஜிகர்த்தன் வினவினான். குத்சனுக்கு அவன் மீண்டும் மீண்டும் அதனைக் கேட்டது மிகவும் சலிப்பூட்டியது. ‘இதோ பார், என்னாலும் உன்னைக் கொல்ல...