Home » Home 07-09-2022

வணக்கம்

எழுத்து, இசை, ஓவியம் உள்ளிட்ட எந்த நுண்கலையாயினும் சரி. சராசரி ரசனைக்கு / மேம்பட்ட ரசனைக்கு என்று எப்போதும் இரண்டு பிரிவினர் செயல்பட்டு வந்திருப்பார்கள். இரு தரப்பு ரசிகர்களுக்கும் எப்போதும் உரசல் இருக்கும். ரசனை மாறுபாடு சார்ந்த மோதல்கள் எழும். காலம் தோறும் உண்டு. உலகம் முழுதும் உண்டு.

இந்தியாவில் எல்லா தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ஒரு கலைஞன் உண்டென்றால் அது இளையராஜா மட்டுமே. அவரை விமரிசிப்பவர்கள்கூட இசைக்கு அப்பாற்பட்ட விவகாரங்களுக்காக மட்டும்தான் விமரிசிப்பார்களே தவிர, இசையை அல்ல. நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்ணைப் போல வாழ்வோடு ஒன்றிவிட்ட இசை அது.

இந்த இதழின் சிறப்புப் பகுதி இளையராஜாவைப் பற்றிப் பேசுகிறது. அவர் இசையமைக்கும் விதம் குறித்துக் கார்த்திகேயன் நாகராஜன் எழுதியிருக்கும் கட்டுரையும் சரி; எந்த அம்சங்கள் அவரை ‘இசையமைப்பாளர்’ என்கிற பொதுவான இடத்தில் இருந்து பெயர்த்து எடுத்து மேதை என்ற பீடத்தில் அமர வைக்கிறது என்று ஆராயும் என். சொக்கனின் கட்டுரையும் சரி; எப்படி அவர் நம் வாழ்வோடு இரண்டறக் கலக்கிறார் என்று சுட்டிக் காட்டும் மகுடேசுவரனின் கட்டுரையும் சரி. வெறுமனே துதி பாடும் எழுத்தல்ல. மிகுந்த நுட்பமும் கூர்மையும் கொண்ட கவனிப்பின் விளைவுகள். இளையராஜாவை ரசிப்பதை வாழ்வின் முதல் பணியாகவும் பிறவற்றை அடுத்தும் வைத்துக்கொண்டு வாழ்பவரான பொ. காத்தவராயன், ராஜாவின் பாடல்கள் எப்படியெல்லாம் பிறரால் கையாளவும் களவாடவும் பட்டிருக்கிறது என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் குறிப்பிடும் பாடல்களை உடனுக்குடன் யூ ட்யூபில் கேட்க வசதியாக ஆங்காங்கே லிங்க் தரப்பட்டுள்ளது.

சென்ற வாரம் காலமான முன்னாள் சோவியத் யூனியனின் இறுதி அதிபர் மிக்கைல் கோர்பசேவ் குறித்து ஸஃபார் அஹ்மத் எழுதியுள்ள கட்டுரை பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. சோவியத்தின் அருமை பெருமைகளைக் குறித்துப் பல்லாயிரக் கணக்கான பக்கங்கள் எழுதிக் குவித்த கம்யூனிஸ்டுகள், அந்தக் கட்டமைப்பு சிதைந்ததன் பின்னணியையோ, அதற்கான உண்மைக் காரணங்களையோ குறிப்பிட்டுப் பேசியதும் இல்லை; எழுதியதும் இல்லை. சோவியத் சிதைந்ததற்கு முழுப் பொறுப்பும் கோர்பசேவ்தான் என்று பழியைத் தூக்கி அவர் தலையில் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

உண்மை முற்றிலும் வேறு. கோர்பசேவுக்கு முன்னால் சோவியத்தை ஆண்டவர்களின் காலத்து அவலங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து வெடித்துச் சிதறியபோது கோர்பசேவ் பதவியில் இருந்தார் என்பதே சரி. மறுமலர்ச்சி-வெளிப்படைத்தன்மை என்றெல்லாம் அவர் பேசியதும் அதை நோக்கி அடியெடுத்து வைத்ததும் ரஷ்யர்களுக்கு அன்று புரியவில்லை. மேற்குலகின் கைக்கூலியாகிவிட்டார் என்று சொன்னார்கள். இன்று வரை அவர்களுக்கு அந்த எண்ணம் இருப்பதனால்தான் அவரது இறுதிச் சடங்குகளுக்கு புதின் செல்லாததுகூட அங்கே ஒரு பொருட்டாக இல்லை. கோர்பசேவை முன்வைத்து, சோவியத் என்ற கட்டமைப்பு சிதறியதன் பின்னணியை விரிவாக விளக்குகிறது இக்கட்டுரை.

இவை தவிர, ரோஹிங்கியா முஸ்லிம்களை பங்களாதேஷ் மொத்தமாக விரட்டியடிக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் நரகத் தீவு குறித்து சிவசங்கரி எழுதியுள்ள கட்டுரை, சசி தரூர் குறித்த பாபுராஜின் கட்டுரை, துபாய் மாலில் ஒரு திர்ஹாமுக்கு என்ன வாங்க முடியும் என்று ஆராயும் நசீமாவின் கட்டுரை, அதிகம் தெரியாத வாட்சப்பின் சில நூதன வசதிகளை வெளிச்சமிடும் வெங்கடரங்கனின் கட்டுரை என இந்த இதழில் பல முக்கியமான கட்டுரைகள் உள்ளன.

மெட்ராஸ் பேப்பர் குறித்து உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். மேலும் சிறப்பான கட்டுரைகளுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

சிறப்புப் பகுதி: இளையராஜா

இசை

ஆயிரம் பேர் கேட்ட அபூர்வமில்லாப் பாடல்

இப்போதெல்லாம் இசையும் பாடல்களும் திறன்பேசிச் செயலிகள் மூலமே கேட்கிறோம். இதன் மூலம் நாம் பெற்றதும் இழந்ததும் என்னவென்று யோசித்திருப்போமா? வெளியேற...

இசை

வாஹ், ஜாகிர்!

தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் கடந்த வாரம் காலமானார். தபேலா என்ற தாளவாத்தியக் கருவிக்குத் தனித்த அடையாளம் தந்தவர். தமது 73 வது வயதில் அமெரிக்காவின்...

இசை

பந்துவராளியும் பால் கொழுக்கட்டையும்

சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான மார்கழி கர்நாடக இசைவிழா இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. நூற்றாண்டுத் தொடர்ச்சி கொண்ட இத்திருவிழாவை...

இசை

ராஜ வாத்தியார்!

‘இசை எங்கிருந்து வருகிறது?’ என்ற ஆதாரக் கேள்வி, இந்தத் தலைமுறையில் நகைப்புக்குரிய இன்னொரு பழங்கேள்வியாக ஆக்கப்பட்டு அடித்துத் துவைக்கப்பட்ட ஒன்று...

aim தொடரும்

aIm it -2

அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து...

இசை

ஷேக் சின்ன மௌலானா: இன்னுமொரு நூற்றாண்டிரும்!

“எனது எதிர்காலம் ஸ்ரீரங்கத்தில்தான். எனது இஷ்ட தெய்வமான ராமனையும் ஷேத்ரமூர்த்தியான ரங்கநாதரையும் வழிபட்டுக் கொண்டே என் கலையை வளர்ப்பேன்” என்று வந்து...

சுற்றும் பூமி

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

கனடா: கொண்டையில் ஒரு கூட்டணிப் பூ

கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

சிந்தித்த வேளை

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!