Home » Archives for April 10, 2024

இதழ் தொகுப்பு April 10, 2024

நம் குரல்

நூறைத் தொடும் நேரம்

மெட்ராஸ் பேப்பர் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த புதன் கிழமை (ஏப்ரல் 17, 2024) வெளியாகவிருப்பது நமது நூறாவது இதழ். பாரம்பரியம் மிக்க பல தமிழ்ப் பத்திரிகைகள் நலிவுற்றுப் போய்க்கொண்டிருக்கும் காலத்தில் ஒரு புதிய இணைய வார இதழை, சந்தா செலுத்தி வாசிக்க வேண்டிய இதழைத் தமிழ் வாசகர்கள்...

Read More
உலகம்

ஆப்கன் குழந்தைகள்: எலும்பை எண்ணிப் பார்க்காதீர்கள்!

பசியாலும் பஞ்சத்தாலும் நிலைகுலைந்த எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க தேசத்துக் குழந்தைகளின் புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். எலும்பும் தோலுமாகப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். வெகு விரைவில் ஆப்கனிஸ்தான் குழந்தைகளும் இப்படி ஆக வாய்ப்பிருப்பதாக ஐநா எச்சரித்திருக்கிறது. ஆஃப்கானிஸ்தான்...

Read More
தமிழ்நாடு

அரணையூர் ‘அதிபர்’: ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

தமிழகத்தில் 2016-லிருந்து தேர்தல் அரசியலில் இறங்கிய நாம் தமிழர் கட்சி மெல்ல மெல்ல வளர்ந்து கடந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் தோராயமாக 7 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றிருக்கிறது. கூட்டணிகளில்லை, எந்தக் கட்சியின் பாலும் சமரசமில்லை, சாதி, மத பேதமில்லை என்று தனக்கென்றொரு தனிப்பாணி கொண்டு மேலேறி...

Read More
உணவு

குறிஞ்சிக் காளான் கேசரோல்

‘இந்தப் பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிடக் கிடைச்சது’ என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமதிஸ்ட் உணவகத்தின், குறிஞ்சித் திருவிழாவிற்குச் சென்றோம். மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் உணவு முறைகளை, நகர மக்களுக்கும் அறிமுகப்படுத்துவது இதன் நோக்கம். உணவின் வரலாற்றையும்...

Read More
இந்தியா

பாதுகாப்பையா பணயம் வைப்பது?

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் ஒரு முறை விவாதத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை அதிகம் பேசப்படாத பால்க் விரிகுடா, வாட்ஜ் பேங்க் விஷயங்களும் இம்முறை பொதுவெளியில் பேசு பொருளாகியுள்ளன. இந்தியப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய திசையில் இவ்விவகாரம் தற்போது சென்று கொண்டுள்ளது...

Read More
உணவு

வண்டிக்’கார’ கச்சேரி

பூரி, சப்பாத்தி எல்லாம் தாத்தாவுக்கு மூன்றாம் பட்சம்தான். சிற்றுண்டி என்றாலே இட்லியும் தோசையும்தான். இல்லையென்றால் உப்புமா. அவர் சிறுவயதாக இருக்கும்போது உணவில் கோதுமையின் அறிமுகமே கிடையாது. மேத்தி சப்பாத்தி, மூளி பராத்தா என விதவிதமாகச் செய்வார் அத்தாட்டி. ஆனாலும் தாத்தாவுக்கு ஏதாவது விசேஷமாக...

Read More
பயணம்

பெண்களின் சொர்க்கம்

நம்பர் ஒன் ஆக வருவது எப்போதுமே நல்லது என்றில்லை. இலங்கை சில காலமாகவே பலவித பலான உலகத் தரப்படுத்தல்களில் முதலிடத்தைப் பிடித்து மானம் போய் நின்றது. நீண்ட காலத்திற்குப் பின்னர், இப்போது ஓர் உருப்படியான முதலிடம் கிடைத்திருக்கிறது. வழங்கியது “டைம் அவுட்” சர்வதேசச் சஞ்சிகை. உலகிலேயே, பெண்கள் தனியாகச்...

Read More
சுற்றுலா

சுற்றிப் பார், சொக்கிப் போவாய்!

பாபிலோனின் பழைய தொங்கும் தோட்டங்கள், சுல்தான் நெபுகாத் நெசர் வகையறாக்களைச் சிறிது நினைவுகூர்ந்து, நகர்த்தி வையுங்கள். உலகம் உருண்டை. காலம் உருண்டை. மீண்டும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன, பாலைவனத் தொங்கும் தோட்டங்கள். ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் ஏழு எமிரேட்டில் ஷார்ஜா ஒன்று. ஷார்ஜாவிலிருந்து...

Read More
ஆன்மிகம்

மிஸ்டர் சந்திரமௌலி…!

மிஸ்டர் சந்திரமௌலி, மிஸ்டர் சந்திரகுமார் யாரென்று தெரியுமல்லவா. தமிழ் சினிமாவில் மிக அரிதாக, அழகாக, நெகிழ்வாகக் காண்பிக்கப்படும் ஒரு உறவு மாமனார்​- மருமகன் உறவு. இத்தனையாண்டுகள் ஆனாலும் மௌனராகம் படத்தில் இவர்கள் இருவருக்கும் நடக்கும் சிறிய சம்பாஷனைகள் இன்றும் நினைவில் இருப்பதற்கு காரணம் அதன் அரிதான...

Read More
சுற்றுச்சூழல்

மரத்துக்கு மரியாதை

விருது என்பது ஏதேனுமொரு துறையில் வென்றவர்களுக்கு வழங்கப்படும். எந்தச் செயலுமின்றித் தேமேயென்று இருக்கும் மரங்களுக்கும் விருது வழங்கப்படுவதுண்டு. இங்கல்ல… ஐரோப்பாவில். ‘ட்ரீ ஆஃப் த இயர்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதை இவ்வாண்டு போலண்டில் உள்ள பழமையான, பீச் (Beech) என்ற...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!