Home » குறிஞ்சிக் காளான் கேசரோல்
உணவு

குறிஞ்சிக் காளான் கேசரோல்

‘இந்தப் பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிடக் கிடைச்சது’ என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமதிஸ்ட் உணவகத்தின், குறிஞ்சித் திருவிழாவிற்குச் சென்றோம். மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மக்களின் உணவு முறைகளை, நகர மக்களுக்கும் அறிமுகப்படுத்துவது இதன் நோக்கம். உணவின் வரலாற்றையும் அறிந்த, பிரபல சமையற்கலை நிபுணர் ராகேஷ் ரகுநாதன் அவர்களின் தலைமையில் நடப்பதாக விளம்பரம் கண்டோம். காலை அரைவயிறு மட்டும் உண்டு, தகுந்த தயாரிப்போடு சென்றோம்.

கான்கிரீட் கட்டடங்கள் நிறைந்த சென்னையில், ஒரு காட்டு பங்களாவிற்குள் நுழைந்தது போலிருந்தது. சுற்றிலும் மரங்களும் செடிகளும் நிறைந்திருக்க, நடுவே நடைபாதை. ஆடம்பர உணவகம் என்பதால், வந்திருந்தவர்கள் யாரும் தமிழ் பேசவில்லை. நிறைய வெளிநாட்டவரையும் பார்க்க முடிந்தது. இப்போதெல்லாம் நம்மூர்க்காரர்களை விட, சென்னையின் பிரியாணி உணவகங்களில் இவர்கள்தான் அதிகம் தென்படுகிறார்கள். தென்னிந்திய மசாலாவின் ருசி யாரை விட்டது..?

சரி, நமது குறிஞ்சி அயிட்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளனவா என்று சுற்றிப்பார்த்து ஏமாந்துவிட்டு, உள்ளே அமர்ந்தோம். திருவிழாவிற்கான எந்த அறிகுறியும் இல்லை. எல்லோரும் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். நல்லவேளை உணவுப் பட்டியலட்டையின் முதலிரண்டு பக்கங்களில் குறிஞ்சியின் பெயரும், உணவுகளும் இருந்தன. ஐந்து சூப் வகைகள்; ஐந்து ஸ்டார்ட்டர்ஸ் எனப்படும் துவக்க உணவுகள்; இரண்டு சாலட் எனப்படும் பச்சைக் காய்கறி வகைகள்; உணவை முடித்துவைக்க நான்கு இனிப்பு டெஸெர்ட்கள். முக்கியமான சோறு வகைகளைக் காணோம். இங்கு வரத் தயாரிப்பு வேறு பலமாக இருந்ததால், பசி கண்ணைக் கட்டியது. உற்றுப் பார்த்தால் மூன்றே வகைதான் இருந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!