தமிழ்நாட்டைச் சேர்ந்த இருபத்தேழு மீனவர்களை மூன்று நாள்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கிறார்கள். பாக் ஜலசந்தி பகுதியில் அவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்தபோது இந்தக் கைதுச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. இதே போலக் கடந்த அக்டோபர் மாதம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு...
இதழ் தொகுப்பு October 2023
1. 21ம் நூற்றாண்டின் இணையற்ற வில்லன் தேதி: 21-பிப்ரவரி-2022 (உக்ரைன் போருக்கு மூன்று நாட்கள் முன்னர்) இடம்: கிரெம்ளின் மாளிகை அவை: ரஷ்யப் பாதுகாப்பு சபை கைகளை வீசிக்கொண்டு துரித நடையுடன் நுழைகிறார், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். பளபளவென வெள்ளைத் தூண்களுடைய அந்தப் பெரிய வட்ட அறையின் இருக்கையில்...
‘இனி அவ்வளவுதான். எல்லாம் முடிந்தது. பொது வேட்பாளர் சிரிசேனா வென்றுவிட்டார். இதற்கு மேலும் தாக்குப் பிடிப்பதில் பலனில்லை. அறிவித்து விடலாம்தான். எப்படி அறிவிப்பது..? மக்களோ பழங்கால இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போல அத்தனை பரபரப்பாய்த் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்...
இதுவரை நூற்று ஐம்பத்து நான்கு கசையடிகள், பதின்மூன்று தடவை கைது, ஐந்து தடவை குற்றவாளி என்று நீதிமன்றத் தீர்ப்பு, 2015-ஆம் ஆண்டு முதல் பதினாறு வருட சிறைவாசம் என்று நெடும் துயரைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நர்கீஸ் முஹம்மதி என்ற ஈரான் மனித உரிமைப் போராளிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான...
47 ஏ.கே.செட்டியார் (04.11.1911 – 10.09.1983) வாழ்வில் திட்டமிட்டு, தான் இதுவாக ஆக வேண்டும் என்று முயற்சி செய்து அதுவாக ஆனவர்கள் பலர் உண்டு. அதற்கான திட்டமிட்ட உழைப்பு, தயாரிப்பு அவர்களை அத்துறையில் விற்பன்னராக மாற்றும். சாதனையாளர்களாக அறியப்பட்ட மனிதர்களில் இவர்கள் பெரும்பான்மையோர். ஆனால்...
72 அகதி இலங்கை அகதிகளுக்கு உதவப்போகிறேன் என்று கிளம்பிவிட்டானே தவிர ராமேஸ்வரம் என்கிற பெயருக்குமேல் அவனுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பது அவனுக்கு மட்டுமேதெரிந்திருந்தது. அந்தப் பெயர்கூட, அம்மா அடிக்கடி, ‘கண்ணை மூடுவதற்குள் காசி ராமேஸ்வரம் போய்வந்துவிடவேண்டும்’ என்று...
பள்ளி நாட்களில் எனக்குள் இருந்த ஒரு முக்கியமான கேள்வி ‘நாம் எதற்காக வரலாற்றைப் படிக்க வேண்டும்? என்பதுதான். அதிலும் வரலாறு என்பது ஏதோவொரு சத்திரியனைப் பற்றிப் பேசுகிறது அல்லது ஒரு சதிகாரனைப் பற்றிப் பேசுகிறது. சாமானியர்களைப் பற்றியா பேசுகிறது? இல்லையே…. சாமானியர்கள் பற்றிப் பேசாத...
நொறுக்குத் தீனிகளின் உலகம் சுவாரஸ்யமானது. அலாதியானது. அவரவர் மனதோடு நெருங்கிய தொடர்பு உடையது. வித்தியாசங்கள் எதுவுமின்றி அனைவரையும் அரவணைக்கும் சமத்துவம் மிக்கது. காலை, மாலை, இரவு என வேளைப்பாகுபாடுகள் இன்றி எந்நேரமும் உண்ணத்தக்கது. ஒருவகையில் இவைகள்தான் நொறுக்குத் தீனியின் இலக்கணங்கள். இவை எல்லாம்...
உலகின் மிகப் பெரிய இரண்டு மக்களாட்சியில், கட்சிகளும், அவற்றின் கொள்கைகளும் நிர்ணயம் செய்யும் முறையும், தேர்தல் முறையும், போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் மிகவும் வேறுபடுகின்றன. இந்தியாவில் மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற கட்சி...
மக்கள் நெரிசலில் திணறும் பாண்டி பஜார் தற்போது அயலக மங்கை போல் நவநாகரிக அவதாரம் எடுத்திருக்கிறது. அழகுபடுத்தப்பட்ட செல்வச் சீமாட்டி போல் இருக்கிறது. காரணம் சாலையின் இருமருங்கிலும் உயிர்ப்போடு இருக்கும் பெரிய பெரிய மரங்களும், அதையொட்டிய அகன்ற நடை பாதையும்தான். அங்கிருந்த கடைகளை அகற்றிவிட்டு...