Home » நர்கீஸ் முகம்மதி: வாழ்வெல்லாம் போராட்டம்
விருது

நர்கீஸ் முகம்மதி: வாழ்வெல்லாம் போராட்டம்

நர்கீஸ் முகம்மதி.

இதுவரை நூற்று ஐம்பத்து நான்கு கசையடிகள், பதின்மூன்று தடவை கைது, ஐந்து தடவை குற்றவாளி என்று நீதிமன்றத் தீர்ப்பு, 2015-ஆம் ஆண்டு முதல் பதினாறு வருட சிறைவாசம் என்று நெடும் துயரைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நர்கீஸ் முஹம்மதி என்ற ஈரான் மனித உரிமைப் போராளிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்து இருக்கிறது. நோபல் சரித்திரத்தில் சிறையில் இருக்கும்போது அமைதிக்குப் பரிசு அறிவிக்கப்பட்ட ஐந்தாவது நபராகிறார் நர்கீஸ் முகம்மதி.

ஈரானிய அரசு இன்றையத் தேதியில் தனக்குத் தலையிடியான முதல் பத்துப் பேரைப் பட்டியிலிட்டால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவையும் முந்திக் கொண்டு முதலிடத்தில் இருப்பார் நர்கீஸ் முஹம்மதி. அந்தளவுக்கு அவரது மனிதவுரிமைச் செயற்பாடுகளும், பெண்ணுரிமைப் போராட்டங்களும் ஈரான் எங்கும் வெகு பிரசித்தம். நர்கீஸ் தன் பெண் படையோடு கூட்டமாய் இறங்கினால் அதகளம்தான். விதவிதமான சமூக அவலங்களின், பெண்கள் மீதான அடக்குமுறைகளின் டேட்டா பேஸ் கையில் இருக்கும். அந்த இடமே பெரும் ரணகளமாய் மாறிவிடும். தன் உயிர் மீது ஒருதுளி அச்சமில்லாத, யாருக்கும் சோரம் போகாத, யாருடனும் எந்த சமரசத்திற்கும் இணங்காத போராளி அவர்.

1972-ஆம் ஆண்டு பிறந்த நர்கீஸ் அணு இயற்பியல் பட்டதாரி. பல்கலைக்கழகத்தில் படிக்கும் நாள்களிலேயே நர்கீஸின் ரத்தம் சீரான ரகத்தில் என்றைக்கும் ஓடியதில்லை.ஒரு ரேஸிங் பைக் போல எப்போதும் உச்ச வேகத்தில் கொதித்துக் கொண்டே இருக்கும். பட்டம் பெற்று வெளியே வந்து எஞ்சினியர் வேலை பார்த்தார். பொருளாதாரச் சொகுசை எஞ்சினியர் வேலை தந்தது. ஆனால் அவருக்குள்ளிருந்த அந்தப் போராளி ‘எதையாவது பண்ணு’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ஈரானிய ஜனநாயக விரோத அரசியல் சூழலும் நர்கீஸுக்கு அலாவுதின் அற்புத விளக்கு போல எழுதவும் பேசவும் பலதரப்பட்ட சர்ச்சைகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினார். ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, மரண தண்டனைக்கு எதிராக, ஆணாதிக்க அரசியல் சாசனத்திற்கு எதிராக, அரசுக்கு எதிராகவும்…..

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!