வேங்கடேசன் என்றால் உடன் நினைவுக்கு வருவது திருப்பதி. நின்ற கோலத்தில் கோடிக்கணக்கான பக்தர்களின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து அருளக்கூடிய ஒரு ஆகர்ஷண சக்தி பாலாஜி. அந்த வேங்கடவனை அமர்ந்த கோலத்தில் பார்க்க விரும்பினால் செல்ல வேண்டிய ஸ்தலம்தான் நெமிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோயில்...
இதழ் தொகுப்பு September 6, 2023
இருநூறு ரூபாய் விலைக் குறைப்பு – இந்திய சமையல் எரிவாயுவிற்கு. அடுத்து பெட்ரோல் என்ற ஆசையிருந்தால், மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள். இப்போதைக்கு வாய்ப்பில்லை இந்தியர்களே! உக்ரைன் – ரஷ்யப் போரின் புண்ணியத்தில், நமக்கு விலையேறாமல் இருந்ததே பாக்கியம். ஐரோப்பிய நாடுகளின் திண்டாட்டத்தைப்...
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பா.ஜ.க.வையும் அதன் சித்தாந்தங்களையும் எதிர்க்கும் கட்சிகள் INDIA கூட்டணியில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றன. பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகள் வழக்கம்போல மோடியின் ஒற்றைத் தலைமையை ஆதரித்து வருகின்றன. INDIA...
சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அலைவோருக்காக அமைக்கப்படுவது, அகதி முகாம். இது உலகெங்கும் உண்டு. பல்வேறு நாடுகள். பல்வேறு காரணங்கள். பல்லாண்டு காலமாக உள்நாட்டுப் போரில் சிதறிச் சின்னாபின்னமாகிக் கிடக்கும் சிரியாவில் இல்லாதிருக்குமா? உண்டு. என்ன ஒரு வித்தியாசம் என்றால் சிரியாவின் வடக்கு எல்லையோரம்...
ஆப்கானிஸ்தான் என்றால் உள்நாட்டுப் போரும் தாலிபன் இயக்கமும்தான் பொதுவாக நினைவுக்கு வருபவை. ஆனால் இந்த நாடு இயற்கை வளங்கள் அதிகமுள்ள ஒரு நாடு என்பது பலருக்குத் தெரிந்திருக்காது. செம்பு, லிதியம் போன்ற உலோகப் பொருட்களும், இரத்தினக் கற்களும் ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்களில் முக்கியமானவை. பாஞ்ஷிர்...
உலகில் இரண்டு பெரிய மக்களாட்சி நடக்கும் நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இரண்டுமே ஜனநாயக முறையில் ஆட்சி நடக்கும் நாடுகள்தான் என்றாலும் இரண்டின் தேர்தல் முறையும் மாறுபட்டவை. அமெரிக்கா தனது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது...
இந்தியாவுக்கு முதலிடம். உக்ரைன் இரண்டாமிடத்தில். தென் ஆப்ரிக்கா மூன்றாவது. “என்னவாயிருக்கும்?…” என்றுதானே யோசிக்கிறீர்கள்.? உலகெங்கிலுமுள்ள நாடுகளில் மக்கள் சமைப்பதற்காகச் சராசரியாக எவ்வளவு நேரம் செலவிடுகின்றனர் என்றொரு ஆராய்ச்சி நடத்தியிருக்கின்றனர். சாப்பிட அல்ல மக்களே… சமைக்க. அந்தப்...
சந்திரயான்-3 திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் இஸ்ரோ சந்தித்த பெருஞ்சிக்கல் ஒன்றை நமது நாமக்கல் மாவட்ட மண் தீர்த்து வைத்தது என்பதை அறிவீர்களா? பெரும்பான்மையோர் கவனிக்கத் தவறிய, நாமக்கல் மாவட்டத்துக்காரர்கள் கெத்துக் காட்ட வேண்டிய விஷயம் அது. அப்படி அவர்கள் மார்தட்டிக் கொள்ளும்படியாக என்ன நடந்தது...
உலகத்தில் புரிந்து கொள்ள முடியாத சங்கதிகளின் பட்டியலை எழுதச் சொன்னால் பெண்களின் மனசுக்கு அடுத்தபடியாகப் பாகிஸ்தான் அரசியலைக் கை காட்டும் போக்கே இத்தனை நாளாய் இருந்தது. வரிசையின் புது அப்டேட்டில் தாராளமாய் ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதினையும் சேர்த்துக் கொள்ளலாம். புதின் இந்த உலகத்தின் மர்மங்களில்...
67. இந்திராவை மிரட்டிய கனவு லண்டனில் மூன்றாவது வட்டமேஜை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டினால் இந்தியாவுக்குப் பயன் ஏதும் இல்லை என்பதாலும், அதன் பிறகு காந்திஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் புறக்கணித்ததாலும் காங்கிரஸ் கட்சி மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்பதில்லை எனத்...