Home » புதின், புதிர் மற்றுமொரு புதிய சேர்க்கை
உலகம்

புதின், புதிர் மற்றுமொரு புதிய சேர்க்கை

உலகத்தில் புரிந்து கொள்ள முடியாத சங்கதிகளின் பட்டியலை எழுதச் சொன்னால் பெண்களின் மனசுக்கு அடுத்தபடியாகப் பாகிஸ்தான் அரசியலைக் கை காட்டும் போக்கே இத்தனை நாளாய் இருந்தது. வரிசையின் புது அப்டேட்டில் தாராளமாய் ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதினையும் சேர்த்துக் கொள்ளலாம். புதின் இந்த உலகத்தின் மர்மங்களில் ஒன்று, ‘நான் என்ன செய்வேன் எப்படிச் செய்வேன் என்று சொல்லிட்டுப் பண்றதில்ல, அது பண்ணும் போதுதான் தெரியும்’ போன்ற தமிழ் சினிமா பஞ்ச் டயலாக் அமுத வாக்குகளையெல்லாம் தன் வாழ்க்கையில் நிஜமாய்க் கடைப்பிடிப்பவர் புட்டின். அண்மைய அதிரடியாக ரஷ்யாவில் இஸ்லாமிய வங்கிகளுக்கு அனுமதி அளித்து இருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவின் நாடாளுமன்றம் இஸ்லாமிய வங்கிகளுக்குப் பச்சை கொடி காட்டியதைத் தொடர்ந்து இஸ்லாமிய நிதியியலுடன் தொடர்புடைய வங்கிச் சேவைகள் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து முதல்கட்டமாக செச்னியா உட்பட ரஷ்யாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் நான்கு பிராந்தியங்களில் அடுத்த இரண்டு வருடங்களுக்குப் புழக்கத்துக்கு வருகின்றன. இத்திட்டம் வெற்றிகரமாய் நடைமுறையானால் முழு ரஷ்யாவிலும் அமலாகும் என்கிறார்கள் ரஷ்யாவின் பொருளாதாரப் புள்ளிகள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!