Home » Archives for September 6, 2023

இதழ் தொகுப்பு 2 weeks ago

நம் குரல்

சநாதனமும் சந்தர்ப்பவாதமும்

நம் நாட்டில் சாதியும் மதமும் அரசியலின் துணைக் கருவிகள். சாதாரண மக்களின் ஆவேச உணர்ச்சியை எளிதாகத் தூண்டி, அமைதியைக் குலைப்பதற்கு இவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட நாள்களாக இங்கே உள்ளது. சாதிகளை ஒழிப்போம், மதவெறி இல்லா தேசத்தை உருவாக்குவோம் என்று யாராவது பேசுவார்களேயானால், அதுவும் ஓட்டு அரசியலின்...

Read More
சந்தை

பர்மா அரிசிக்குப் பத்து பிள்ளைகள் கேரண்டி!

பர்மா பஜாருக்குப் போகிறோம் என்றதும் ‘செத்துப்போன சந்தை அது. எதற்கு அங்கே செல்ல வேண்டும்? அங்கே ஒன்றுமில்லை.’ என்றுதான் எல்லோரும் சொன்னார்கள்.  கடற்கரை ரயில் நிலையத்தை விட்டு இறங்கி வெளியே வந்தால் இருபுறமும் பர்மா பஜார்தான். அப்படியொன்றும் அவசர சிகிச்சையில் இல்லை. உயிரோடு தான் இருக்கிறது. முன்பொரு...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 66

66 தோற்றம் சும்மா பஸ்ஸில் போனால் போய்க்கொண்டே இருந்தது. எவ்வளவு பெரியது என்கிற பிரமிப்பை உண்டாக்கிற்று டெல்லி. அதை, அங்கேயே பல வருடங்களாய் வசிக்கிற வெங்கட் சாமிநாதன் தில்லி என்றும் ஊர்ப்பக்கமிருந்து போய் அந்த ஊர்க்காரனாகவே ஆகிவிட துடித்துக்கொண்டிருந்த சாரு நிவேதிதா டெல்லி என்றும் குறிப்பிட்டார்கள்...

Read More
அறிவியல் சுற்றுச்சூழல்

எதனால் எத்தனால்?

உலகமே இன்று இயற்கையை நோக்கித் திரும்ப முயல்கிறது. தம்மால் முடிந்த நடவடிக்கைகளைத் தனிமனிதனும், அரசும் இணைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் பசுமைக் குடில் வாயுக்களைக் (green house gases) குறைப்பது. பசுமைக்குடில் வாயுக்கள் பூமி‌ வெப்பமயமாதலை அதிகப்படுத்தும். இந்தியாவின் பசுமைக்...

Read More
ருசி

ஐஸ்க்ரீம் கனவுகள்

தெருக்கோடியில் ஐஸ் வண்டி மணியடித்துக் கொண்டு வரும்போதே அப்பா சொல்லிவிடுவார், ‘ஐஸெல்லாம் கெமிக்கல். தொண்டைல சதை வளரும்!’ சின்னத்தைக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு டான்ஸில்ஸ் வளர்ந்து விட்டதாம். வாழும் உதாரணம் ஒன்றையும் சுட்டிக்காட்டிய பிறது என்ன செய்ய முடியும்? கோடை விடுமுறை நாட்களில் அனல் கங்காய் இறங்கும்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 41

41 ஞா. தேவநேயப் பாவாணர்  (07.02.1902 –  15.01.1981)     தமிழில் சொல்லாராய்ச்சித் துறையில் பெரும் பாய்ச்சலை முதலில் உலகுக்குக் காட்டியவர் என்று இவரைச் சொல்லலாம். சொல்லாராய்ச்சி ஒப்பீட்டில் 40மொழிகளின் சொற்களை ஒப்பிட்டுக் காட்டி இவரது கட்டுரைகள் அமைந்தன.  தமிழ் மறுமலர்ச்சிக் காலத்தின்...

Read More
இந்தியா

காஷ்மீர் தேர்தல்: ஓட்டுகளும் ஓட்டைகளும்

2014 காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் முஃப்தி முகமத் சையித் வென்றது 28 இடங்கள். பி.ஜே.பி. வென்றது 25 இடங்கள். பி.ஜே.பி.க்கு துணை முதல்வர் பதவியளித்து முஃப்தி முகமது சையித் முதல்வரானார். சில மாதங்கள் பேச்சு வார்த்தை நடந்து அடுத்த வருடம்தான் பதவியேற்பு நடந்தது. அவர் இறப்புக்குப் பிறகு அவர் மகள் மெஹபூபா...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 41

உயிரியல் தொழில்நுட்பம் கடந்து வந்துள்ள பாதை மிக நீண்டது. அது செல்ல வேண்டிய தூரமும் இன்னும் நிறைய உள்ளது. சொல்லப்போனால், கடந்து வந்த பாதையை விட மிகச் சுவாரசியமாக இருக்கப் போகின்றது இனி கடக்க இருக்கும் பாதை. இத்தொடரின் இறுதி அத்தியாயமான இதில், உயிரியல் தொழில்நுட்பத்தின் மூலம் நாம் எதிர்காலத்தில் என்ன...

Read More
இந்தியா

களவாணி 3: புத்தம் புதிய சீனப் பதிப்பு

இந்தியாவையே அதிர வைத்த மணிப்பூர் பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில் இப்போது புதிய தலைவலியைக் கொடுக்கிறது சீனா. ஆகஸ்ட் 28ஆம் தேதி சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம் தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தைக் கொண்டாடியது. அதில் 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது...

Read More
இந்தியா

காஷ்மீரில் லித்தியம்: லாபங்களும் அபாயங்களும்

எண்ணெய்க் கிணறுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர், உலகத்தை ஆளலாம். இது இருபதாம் நூற்றாண்டின் கதை. பெரிய மாற்றமில்லை, எண்ணெய்க்கு பதிலாக லித்தியம் என்று போட்டுப் படித்தால், அது இன்றைய நிலை. உலக நாடுகள் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் பசுமைத் தொழில்நுட்பத்தைத் தூக்கிப் பிடிக்கப்போகும் கனிமம் லித்தியம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!