தி கேரளா ஸ்டோரி – விமரிசனம் தி கேரளா ஸ்டோரி படத்தின் நாயகி பெரும்பாலான காட்சிகளில் காதுக்கு மேலே ஒரு முழம் பூவை வைத்துக்கொண்டு வருகிறார். அவர் அப்பாவி அல்லது மதராஸி அல்லது இந்து என்பதற்கான குறியீடாக இருக்கலாம். படத்தைப் பார்த்தால் அந்தப் பூ பார்வையாளர்கள் காதுக்கு இடம் மாறிவிடும். இந்தப் படம்...
இதழ் தொகுப்பு May 10, 2023
கறுப்பர்களுக்கு எதிரான ஆங்கிலேய அடக்குமுறை பற்றி சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். ஆப்பிரிக்காவை ஒரு காலத்தில் கூறு போட்டு ஆண்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தத்தம் பங்குக்கு முத்திரை பதிக்காது சென்றதில்லை. ஆனால் ஆப்பிரிக்கர்களுக்கே நிறவெறி இருக்குமா என்றால், இருக்கும்; இருக்கிறது. வடக்கு...
பஞ்சம் நீக்கும் தலைவன் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரத்தில் ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நிதி சேகரிப்பு நிகழ்வு. அதில் ஒரு பதினொரு வயதுச் சிறுவன் பங்கேற்கிறான். இது அச்சிறுவன் இளமையிலேயே சமூக அக்கறை கொண்டவன் என்பதைக் காட்டுகிறது. வயது பதினொன்றே ஆனாலும் ஆஸ்திரேலியா அச்சிறுவன் வாழும் மூன்றாவது நாடு. அன்று...
டோக்கியோவில் உள்ள ஒரு கல்லூரியில் சீனாவின் ஜாக் மா (அலிபாபா நிறுவனர்) வருகைதரு பேராசிரியராகப் பொறுப்பேற்கிறார் என்கிற செய்தி கடந்த வாரம் பல வர்த்தகப் பத்திரிகைகளின் பக்கங்களை நிறைத்திருந்தன. மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவி, வளர்த்து, உலகப் பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக்கிய ஒருவர் பாடம்...
அநுராதபுரம் இலங்கையின் முதல் நகரம். பாரம்பரிய வரலாற்று நிலம். இப்பொழுது புனித பூமியாக அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த பூமிக்கு ஒரு அழகிய வரலாற்றை மகாவம்சம் சொல்கிறது. தென்னிந்தியாவை சேர்ந்த இளவரசன் விஜயன் மிகவும் துர்நடத்தை கொண்ட இளவரசனாக காணப்பட்டிருக்கிறான் எனவும், அவனையும் அவனது 700 நண்பர்களையும்...
நீங்கள் ஓர் உணவகத்துக்கோ ஆலயத்திற்கோ சென்றால் அங்கே வரும் மனிதர்களைக் கவனியுங்கள். உங்களை அறியாமல் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்களே கவனித்துப் பாருங்கள். சென்று இறங்கிய நேரம் முதல் உங்களையே அறியாமல் எத்தனை புகைப்படங்கள் எடுத்தீர்கள், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, குறிப்புகள் எழுத என உங்கள் மனம்...
24 கவியோகி சுத்தானந்த பாரதி (11.05.1897 – 07.03.1990) ஒருவர் இருபது ஆண்டுகள் மௌனவிரதம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற 1947’இல் தனது மௌனவிரதம் கலைத்துப் பேசியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அது மட்டுமின்றி இவர் எழுதிய பல நூல்களில் முக்கியமான நூலான ஒரு நூலில் 50,000 பாடல்கள் இருக்கின்றன...
பகுதி 2 வெடித்துச் சிதறிய ராக்கெட் ஏவுதலை வெற்றி என்று கொண்டாடுவது ஏன்? இந்தக் கேள்விக்கு எலான் மஸ்க் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். “ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கும் டிராகன் விண்கலத்திற்கும் நேரெதிரான சோதனை வழிமுறைகளை நாங்கள் கையாண்டு வருகிறோம். டிராகனைப் பொறுத்த வரை எந்த விதமான பலவீனத்திற்கும்...
இன்று சிறு கூட்டல் செய்யக்கூடச் செல்பேசியோ கணினியோ தேவை. எழுதி ரசீது கொடுப்பதெல்லாம் காலாவதியான விஷயம். கணினி வேலை செய்யவில்லை என்றால் சின்னக் கடையில் கூட, பெட்டிக் கடையைத் தவிர, எந்தப் பொருளையும் வாங்க முடியாது. ஆனால் இப்படியான சிறு, குறு நிறுவனங்களும், ஏன்… தனி ஒருவர் செய்யும்...
டேனியல் ஓமருக்கு அப்போது வயது பதினான்கு. தெற்கு சூடானின் சிறிய மலைக் கிராமம் நூபாவில் இருந்தான். அங்கு இரண்டாயிரத்துப் பனிரெண்டில் கடுமையான வான்வெளித் தாக்குதல் நடந்தது. டேனியலின் இரண்டு கைகளும் அத்தாக்குதலால் சிதைந்தது. கைகளை இழந்து எதுவுமே செய்ய முடியாமல் வாழ்வதற்குப் பதிலாய், தான் இறந்து...