Home » துனிசியா: கறுப்பர்களை ஒழித்துக்கட்டு!
உலகம்

துனிசியா: கறுப்பர்களை ஒழித்துக்கட்டு!

கறுப்பர்களுக்கு எதிரான ஆங்கிலேய அடக்குமுறை பற்றி சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். ஆப்பிரிக்காவை ஒரு காலத்தில் கூறு போட்டு ஆண்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தத்தம் பங்குக்கு முத்திரை பதிக்காது சென்றதில்லை. ஆனால் ஆப்பிரிக்கர்களுக்கே நிறவெறி இருக்குமா என்றால், இருக்கும்; இருக்கிறது. வடக்கு ஆப்பிரிக்க தேசமான துனிசியாவில் கால காலமாக இருந்து வருகிற நிறவெறிப் பிரச்னை இப்போது அடுத்த பரிமாணம் எய்தியிருக்கிறது.

சமத்துவம் சொல்லித் தர வேண்டிய பள்ளிக்கூடங்களில் வெள்ளை நிறத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு பேருந்து, கறுப்பினத்தவருக்கு ஒரு பேருந்து. பேருந்துகளில் மட்டுமல்ல. துனிசியாவில் வசிக்கும் வெள்ளை நிற மக்கள் தாங்கள் மட்டும்தான் உயர்ந்த மனிதர்கள் என்ற மமதையில் சுற்றி வரும் காட்சிகளைத் தேசமெங்கும் பார்க்க முடியும். இது படிப்படியாகப் பெருகி இன்று சொந்த நாட்டில் அம்மண்ணின் மைந்தர்களே அகதிகளாக அலைவதையும், உயிருக்கு பயந்து பதுங்கி வாழ்வதையும், கலவரங்களில் உயிரிழந்தவர்களின் பிணங்கள் எடுத்துப் போடவும் ஆளின்றி அப்படி அப்படியே கிடப்பதையும் பார்க்க வேண்டிய நிலை உண்டாகியிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!