Home » ‘தல’ புராணம் – 24
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 24

தனஞ்சயன் ஸ்ரீஸ்கந்தராஜா

பஞ்சம் நீக்கும் தலைவன்

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரத்தில் ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நிதி சேகரிப்பு நிகழ்வு. அதில் ஒரு பதினொரு வயதுச் சிறுவன் பங்கேற்கிறான். இது அச்சிறுவன் இளமையிலேயே சமூக அக்கறை கொண்டவன் என்பதைக் காட்டுகிறது. வயது பதினொன்றே ஆனாலும் ஆஸ்திரேலியா அச்சிறுவன் வாழும் மூன்றாவது நாடு. அன்று அச்சிறுவனுக்குத் தெரிந்திருக்காத விஷயம் வளர்ந்து பெரியவனாகி அதே தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக பூகோளத்தின் மறுபக்கத்திலிருக்கும் இங்கிலாந்தில் பதவி வகிக்கப் போவது.

அச்சிறுவன்தான் தற்போது பொதுவாக டானி ஸ்ரீஸ்கந்தராஜா என்று அழைக்கப்படும் தனஞ்சயன் ஸ்ரீஸ்கந்தராஜா. பிறந்தது இலங்கையின் தீவுகளில் ஒன்றில். அவரது வாழ்க்கையின் ஆரம்பம் மின்சார வசதி கூட இல்லாத ஒரு சிறிய கிராமப்புறத்தில். இலங்கையின் அரசியல் நிலைமை காரணமாகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குப் பலர் சென்றார்கள். தனஞ்சயனின் பெற்றோரும் அதற்கு விதி விலக்கல்ல. பப்புவா நியூகினி நாட்டில் ஆசிரியர் வேலை கிடைக்க அந்நாட்டுக்குக் குடும்பமாகப் புலம் பெயர்ந்தார்கள். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேறினார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!