Home » Archives for May 10, 2023

இதழ் தொகுப்பு May 10, 2023

நம் குரல்

திமுகவும் நீட் எதிர்ப்பு விளையாட்டுகளும்

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைந்தன. இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுகள் அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றன. அரசைக் குறை சொல்வதல்ல நோக்கம். நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றைத் தேர்தல் வாக்குறுதியாகத் தரும்போது ஆய்ந்து தெளிய வேண்டியது மக்கள் பொறுப்பே. அதைச் செய்ய விடுத்து...

Read More
சமூகம்

மாயவலையும் மனித விலையும்

எங்களுடைய ப்ராஜக்டில் வேலை பார்க்கும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் அவன். திடீரென அவசர சொந்தப் பிரச்னை என்று விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த கிராமத்துக்குப் போனவன் ஒரு வாரமாகத் திரும்பவேயில்லை. என்னவென்று விசாரிக்க அழைத்தபோது அவன் தந்தையார், தான் அத்தனை வருடம் சேர்த்து வைத்த சேமிப்பை ஒரு...

Read More
புத்தகம்

எண்பதாயிரம் புத்தகங்கள் இல்லாமல் போகப் போகின்றன.

கோவைவாசிகளுக்குத் தியாகு புக் செண்டரைத் தெரியாமல் இருக்காது. அறுபத்து நான்கு வருடப் பாரம்பரியம். சுமார் எண்பதாயிரம் புத்தகங்கள். இவ்வளவு பிரம்மாண்டமானதொரு வாடகை நூல் நிலையம் வேறெங்கும் உண்டா என்பதே சந்தேகம். புகழ்பெற்ற இவ்வாடகை நூலகம் வரும் ஜூன் மாதத்துடன் மூடப்பட இருப்பதாக அதன் உரிமையாளர்...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

மீளல்

சாதத் ஹசன் மண்டோ தமிழில்: எம்.எஸ் / டி.ஏ. சீனிவாசன் (அச்சுதன் அடுக்கா) அந்தச் சிறப்பு ரயில் பிற்பகல் இரண்டு மணிக்கு அமிர்தசரஸிலிருந்து கிளம்பி எட்டு மணி நேரத்திற்குப்பின் லாகூரிலுள்ள மொகல்புராவிற்கு வந்து சேர்ந்தது. வழியில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் பலர் காயமுற்றிருந்தனர். காணாமல்...

Read More
உலகம்

இசை, ஆடல், பாடல் மற்றும் குண்டுவெடிப்புகள் பற்றிய குறிப்புகள்

இதுவும் கடந்து போகும் என்று போரையும் கடக்கின்றனர் உக்ரைனியர்கள். காலங்காலமாக ஆக்கிரமிப்புகளை சந்தித்து வரும் இவர்களுக்கு மனோதிடத்தைக் கொடுக்க முயல்வது கலை. ஆம். டைட்டானிக் திரைப்படத்தில் படகு மூழ்கும் வேளையிலும், இசைக்கருவிகளை வாசித்து மக்களை உற்சாகப்படுத்துவார்களே அதுபோல. மேடைச் சிரிப்புரை, இசை...

Read More
விளையாட்டு

“இதுவரை ஒரே ஒரு கொலைதான் என் கையால் செய்திருக்கிறேன்!”

“இவ்வளவு மரியாதைக் குறைவாகவா எங்களை நடத்துவீர்கள்?” என்று கண்கலங்கி, பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கிறார் வினேஷ் போகட். காமன்வெல்த் மற்றும் ஏசியன் கேம்ஸ் இரண்டிலுமே தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீரர் இவர். இவரைப்போலவே ஒலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும்...

Read More
இந்தியா

பற்றி எரியும் மணிப்பூர். பார்த்து ரசிக்கிறதா மத்திய அரசு?

“Seven Sisters of India” என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மணிப்பூரில் தற்போது மிகப்பெரிய கலவரம் வெடித்திருக்கிறது. மியான்மரை ஒட்டியுள்ள இந்த மாநிலத்தின் வரலாறு உலகமறிந்தது. அன்றைய பர்மாவில் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டபோது இந்த மாநிலத்தின் வழியாகத்தான் அவர்கள் பெரும்பாலும் தப்பித்து...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 24

அவங்க நல்லவங்களா? கெட்டவங்களா? ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி. ஆடை இல்லையேல் அவன் முழு மனிதன் கிடையாது. உண்மையில் மனிதர்களை முழுமையாக்குவதில் முக்கியப் பங்கு ஆடைகளை விட நுண்ணுயிரிகளுக்கே அதிகம். ஆம். ஆடை இல்லாமல் கூட உயிர் வாழும் மனிதர்கள் இப்புவியில் உண்டு. நுண்ணுயிரிகள் இல்லாமல் எம்மனிதராலும்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 49

49 முடிச்சுகள் எப்போது உள்ளே கூப்பிடுவார் என்று குறுகுறுத்தது. ஒருமுறை பார்த்தது போதும். சும்மா சும்மா திரும்பிப் பார்க்கக்கூடாது என்று கட்டுப்படுத்திக்கொண்டான். லீவில் போய்விட்டு வந்தாலே, இல்லாதபோது என்ன நடந்ததென்று அதிகாரிகள் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். சொந்தப் பணம்போட்டு நடத்துகிற வியாபாரம்...

Read More
விழா

வெசாக்: நாளெல்லாம் புனிதம், நாடெல்லாம் கொண்டாட்டம்!

ஒரு குடியானவனிடம் காளை மாடொன்று இருந்தது. சொந்தப் பிள்ளை போல அதனை வளர்த்து வந்தான். குடும்ப உறுப்பினராகவே மாறிவிட்ட அந்தக் காளையோடு, உள்ளார்ந்த பிணைப்பொன்றை ஏற்படுத்தி இருந்தான். தன் எஜமானின் அன்பில் உருகி நின்ற காளை, தளதளவென்று வளர்ந்து, வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தது. ஒருநாள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!