ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். ஒரு பொதுத்தேர்தலுக்கான ஆர்வத்திற்குச் சற்றும் குறையாத ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. இதில் அப்படியென்ன ஆர்வம்? சூடு பறக்கும் இந்த இடைத்தேர்தல் களத்தில், காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு ஆகிய இருவரோடு நாம் தமிழர்...
இதழ் தொகுப்பு February 2023
கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிர்ப்பித்திருந்தார் உலகத் தமிழ்ப் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன். தமிழக ஊடகங்களுக்குக் கொண்டாட்டமான ப்ரேக்கிங் நியூஸாகவும், புலம்பெயர் உலகத் தமிழர்களுக்கு பரபரப்பான ஒரு விவகாரமுமாக மாறி, பற்றிக் கொண்ட இவ்விவகாரத்தின் வெப்பம், இலங்கைப்...
வாழ்வாதாரத்திற்காக மக்கள் புலம்பெயர்வது உலகெங்கும் நடக்கிற ஒன்று. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்வது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருக்கிறது. சமீப காலங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வன்முறைகளும் பெருகியிருக்கின்றன. இந்த வன்முறைச் சம்பவங்கள் படித்துவிட்டுக் கடந்து...
அது திருமலை நாயக்க மன்னர் வாழ்வின் இறுதிக் காலக்கட்டம் . மதுரையில் சைவ வைணவ சாதிப் போராட்டங்கள் ஒரு புறமும், மத போராட்டங்கள் மற்றொரு புறமும் தீவிரமாக இருந்தன. போராட்டங்கள் தொடர்ந்தால் நாட்டின் வளர்ச்சி தடைப்படும் என்ற அச்சம் நாயக்கர் மனத்தில் இருந்தது. ஆட்சி பலவீனமாக மாறும்படி விடக்கூடாது என்று...
13. மரபணுக்கூறு திருத்தம் பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருந்தும் இதயம் போல் மாற்றம் செய்வதாக இருந்தாலும் சரி, அல்லது ஸ்டெம் செல்களைக் கொண்டு ஒரு முழு உறுப்பினை மீளுருவாக்கம் செய்வதாக இருந்தாலும் சரி, அதற்கு முக்கியத் தேவை அந்த உறுப்பின் அல்லது செல்களின் மரபணுக் கூற்றினை மாற்றியமைப்பது. இதற்கு...
39. காந்திஜி விடுதலை 1924 பிப்ரவரியில் மத்திய சட்டசபையில் கொண்டுவரப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு உள்ளாகவே இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து அளிப்பதற்காக ஒரு ராயல் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் மோதிலால் நேரு சில திருத்தங்களை வலியுறுத்தினார். இது குறித்த விவாதங்களின் இறுதியில்...
13 மறைமலையடிகள் ( 1876 – 1950 ) தமிழானது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று முத்தமிழாக வகைப்படுத்தப்படும். அவற்றுள் இயற்றமிழ் என்பது இசை அல்லது நாடகம் அல்லாத செய்யுள்கள் மற்றும் உரைநடைகள் இணைந்த தமிழ். அவற்றுள் செய்யுள் என்பது பாடல் வடிவில் அமைந்தது. புறநானூறும் பாடல்தான்; கம்ப...
தின்பண்டத்தின் பெயரால், அதைச் சிறப்பிக்கவே ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது ஹாங்காங்கில். ’ஏன், நம்ம ஊர்ல பொங்கலுக்குத் திருவிழா எடுக்கறதில்லையா..?’ என்று உங்கள் மனக்குரல் கேட்கிறது. இந்த ‘பன்’ திருவிழா அதைவிடப் பல வகைகளிலும் வித்தியாசமானது. ஹாங்காங்கில் அமைந்துள்ள Cheung Sha என்கிற தீவில்...
38 காவியும் பாவியும் காலையில் சென்ட்ரலில் வந்து இறங்கியவனுக்கு, நம் இடத்திற்கு வந்துவிட்டோம் என்று பறப்பதுபோல குஷியாக இருந்தது. இருள் பிரியப்போவதற்கான அறிகுறிகள், இடப்பக்கம் கூடவே வந்துகொண்டிருந்த வானத்தில் லேசாகத் தெரிய ஆரம்பித்திருந்தன. வானம் எப்படிக் கூட வரும். வருவதைப்போல இருப்பது தோற்ற...
உண்மை என்பதொரு தயிர் சாதம். யார் வேண்டுமானாலும் எளிதாகச் சமைத்து விடலாம். எந்தவித முயற்சியும் பயிற்சியும் தேவையில்லை. ஆனால் பொய் என்பது பிரியாணி மாதிரி. சரியான மசாலாக்களை சரியான விகிதத்தில் சரியாக நேரத்தில் சேர்த்தால்தான் சுவையான பிரியாணி கிடைக்கும். தெருவுக்கு ஒரு பிரியாணி மாஸ்டர் இருப்பதை நீங்கள்...