Home » உக்ரையீனா – 3
அரசியல் வரலாறு உக்ரையீனா

உக்ரையீனா – 3

கிரீமிய யுத்தம்

3. அடிமைகளைப் பயிரிடுவோம்

உக்ரைன் என்றில்லை. ஜெர்மனியின் கிழக்கு எல்லை தொடங்கி ரஷ்ய எல்லை வரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் துறை என்ற ஒன்று பெரிதாக அல்ல; சிறிதாகக் கூட வளரவில்லை. நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவீதம் விவசாயம். நிலம் உள்ள விவசாயிகள் சிலர் இருந்தார்கள். ஆனால், குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் செய்தவர்களே அதிகம். நிலங்கள் பண்ணையார்களுடையவை. பண்ணையார்கள் அந்தந்தப் பிராந்தியத்து மன்னர்களுடையவர்கள். மந்திரிகளுடையவர்கள். இன்றைக்கு பினாமி என்றொரு அதிகாரபூர்வ கலாசாரம் புழக்கத்தில் உள்ளது. அன்று அப்படி ஒரு பெயர் கிடையாது. அவ்வளவுதான் வித்தியாசம்.

நிலச் சொந்தக்காரர்களான பண்ணையார்கள் மந்திரிகளை நன்றாக கவனித்துக்கொள்வார்கள். மந்திரிகள் மன்னருக்கு விசுவாசமாக இருப்பார்கள். இந்த வரி, வட்டி, கிஸ்தி, கப்பம் கட்டுமான சமாசாரங்களில் குறைவறப் பார்த்துக்கொண்டால் போதும். இருக்கும் நாள் வரை இன்பமாக இருந்துவிட்டுப் போய்விடலாம்.

இதில் கவனிக்க வேண்டியது, விவசாயம் செய்வோருடன் நேரடித் தொடர்பில் இருந்தது பண்ணையார்கள் மட்டுமே. விவசாயிகளுக்கு மந்திரிகளையோ, மன்னரையோ தெரியாது. பிரபுக்களெல்லாம் அவ்வளவு எளிதாக தரிசனம் தரமாட்டார்கள். பண்ணையாரை மட்டும் தூர இருந்து பார்க்கலாம். அவரது ஏஜெண்டுகள்தாம் நெருங்கி வந்து பேசுவார்கள். அதுவும் என்ன? வேலையைப் பாருடா வெங்காயம். அவ்வளவுதான்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!