நம்பிக்கை, நாணயம், கைராசி என்று பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டுத் தங்கத்தை வாங்குவது இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. இன்றைய தலைமுறை பலமடங்கு நம்பிக்கையுடன் வாங்கிச் சேமிப்பது பிட்காயின்களைத்தாம். இதையும் திருடி இவ்வுலகில் எதுவுமே நிரந்தரமில்லை என்று நிரூபித்துள்ளது வட கொரியா. பைபிட் என்ற துபாயைச்...
Tag - வட கொரியா
சக்கரங்கள் இல்லாமல் ஓடு தளத்தில் சிராய்த்து கொண்டே சென்ற ஒரு விமானம் அங்கிருந்த ஒரு சுவரின் மீது மோதி வெடிக்கிறது. 179 பேர் இறந்துவிட, இருவர் மட்டும் உயிர் பிழைத்தனர். இந்த விமான விபத்துடன் சென்ற வருடத்தை நிறைவு செய்த தென் கொரியாவில் அரசியல் குழப்பங்கள் இப்போது தான் தொடங்கியுள்ளன. எல்லாம் ஒரு...
போர் நடப்பதென்னவோ ரஷ்யா – உக்ரைன், மத்தியக் கிழக்குப் பக்கம் தான். என்றாலும் மாதத்திற்கொரு முறையாவது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவிடுபவர் வடகொரியா ஓனர் கிம் ஜாங் உன். போர் என்று எதையும் தொடங்கும் திட்டம் இல்லையெனினும், எந்த நொடியிலும் எதுவும் நடக்கலாம் என்கிற காட்சியை உருவாக்கி...
“அண்ணா, கார்ல ஏறுங்க அண்ணா.” “இல்ல தம்பி, நீங்க முதல்ல ஏறுங்க.” “உங்களுக்கு முன்னாடி எப்டிங்கண்ணா, நீங்க முதல்ல ஏறுங்க.” “சரி வாங்க தம்பி, ரெண்டு பேருமே ஏறுவோம்.” ரஷ்ய அதிபர் புதினும், வட கொரிய அதிபர் கிம்மும் இப்படித்தான் பேசியிருப்பார்கள். கதிரவன்...
ஒரு முட்டாளுக்கு வழிகாட்டி, சிறகுகளையும் தந்துவிட்டால், அவனது முன்னேற்றம் உறுதி. குண்டுகளில்கூட கெட்டிக்காரக் குண்டுகள், முட்டாள் குண்டுகள் என்று உண்டு. விமானத்திலிருந்து வீசப்பட்ட பின்பு எந்தக் கட்டுப்பாடுமின்றி, தன்பாட்டுக்கு நினைத்த இடத்தில விழுபவை முட்டாள் குண்டுகள். ஒரு முட்டாள் குண்டிற்கு...
‘உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்’ என்பார்கள். இத்தகைய துணிச்சலுடையவர் கிம் ஜோங்-உன், வடகொரிய அதிபர். இவருக்குச் சற்றும் சளைக்காதவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். வடகொரியா உருவாக உறுதுணையாக இருந்தது அன்றைய சோவியத். அதற்கான நன்றிக்கடனைச் செலுத்தும் சந்தர்ப்பம் இப்போது அமைந்துள்ளது வட...
நாட்டின் அனைத்து ஆண்களும், பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 28 சிகை அலங்காரங்களில் ஒன்றைத் தவிர வேறொன்றை கிராஃபிக்ஸில்கூட நினைத்தும் பார்க்கக்கூடாது, மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தினால் சிறைத்தண்டனை. சொந்ததேச இசை தவிர வேறொன்றைக் கேட்டால் மரண தண்டனை. அரசாங்க அலுவலகத்தில் தூங்கினால் தூக்குத் தண்டனை, ஒரு...
நவராத்திரிக்கு வைத்துத் தரும் ஜாக்கெட் பிட்டில் தொடங்கி, பண்டிகைக் கால இனிப்பு வகைகள் வரையில் மற்றவர்கள் நமக்கும், நாம் மற்றவர்களுக்கும் பரிசுகளைக் கடத்துவது என்றென்றும் முடியாத ஒரு தொடர்கதைதான். பண்டிகைத் தின்பண்டங்களை அவர்கள் கொடுத்தனுப்பிய அதே டப்பாவில் பதில் மரியாதையாக நம் வீட்டு இனிப்புகளை...
தீபாவளி நமக்கெல்லாம் அக்டோபர் கடைசியில்தான். ஆனால் வடகொரியா முன் கூட்டியே ஏவுகணை பட்டாசகளை வெடிக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களில் வடகொரியா ஆறு ஏவுகணைகளை ஏவியுள்ளது – 2011 ல் தலைவர் கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளைக் கண்ட இந்த வருடத்தில்கூட, இது...
கருங்கல் பாறை போன்று இறுகிய முகத்துடன் வடகொரிய அதிபர் கிம் ஜோ உன் அந்தப் பிரமாண்டமான ஹாலுக்கு வந்து கொண்டிருந்தார். கூட்டம் எழுந்து நின்று வேகவேகமாய் கைதட்டத் தொடங்கியது. கிம் தன் ஆசனத்திற்கு வந்து பார்வையால் கும்பலைக் கழுவியவாறு பேசத் தொடங்கினார். ஜெனரல்கள், பிரிகேடியர்கள், கேணல்கள் என்று அவரவர்...