நாட்டின் அனைத்து ஆண்களும், பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 28 சிகை அலங்காரங்களில் ஒன்றைத் தவிர வேறொன்றை கிராஃபிக்ஸில்கூட நினைத்தும் பார்க்கக்கூடாது, மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தினால் சிறைத்தண்டனை. சொந்ததேச இசை தவிர வேறொன்றைக் கேட்டால் மரண தண்டனை. அரசாங்க அலுவலகத்தில் தூங்கினால் தூக்குத் தண்டனை, ஒரு...
Tag - ரஷ்யா
துருக்கி அதிபர் ரஜப் தையிப் எர்டோகனுக்கு சங்கு சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதாகவே மே 14-ம் தேதி நடந்த அதிபர் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை சர்வதேச மீடியாக்கள், அரசியல் விற்பன்னர்கள் முதல் ஊர்பேர் தெரியாத யூடியுப் அறிஞர்கள் வரை கதறினார்கள். ஆனால் அத்தனை ஆருடங்களையும்...
அமெரிக்க அதிபர் தேர்தல் களேபரங்களுக்குச் சற்றும் குறையாத பரபரப்புடன் துருக்கி அதிபர் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் நடந்து ஓய்ந்திருக்கிறது. எழுபது ஆண்டுகாலப் பனிப்போரே ஒளிந்திருந்த இம்மாபெரும் தேர்தல் திருவிழாவில் அமெரிக்காவும், மேற்கு ஊடகங்களும் ஆறு கட்சிகளுடன் கலக்கல் கூட்டணி அமைத்த முன்னாள்...
இதுவும் கடந்து போகும் என்று போரையும் கடக்கின்றனர் உக்ரைனியர்கள். காலங்காலமாக ஆக்கிரமிப்புகளை சந்தித்து வரும் இவர்களுக்கு மனோதிடத்தைக் கொடுக்க முயல்வது கலை. ஆம். டைட்டானிக் திரைப்படத்தில் படகு மூழ்கும் வேளையிலும், இசைக்கருவிகளை வாசித்து மக்களை உற்சாகப்படுத்துவார்களே அதுபோல. மேடைச் சிரிப்புரை, இசை...
எங்கள் எள்ளுப்பாட்டி ஒருவர், எங்கள் கிராமத்துப் பூர்வீக வீட்டின் கீழே ஒரு புதையல் மறைந்திருப்பதாக தன் இறுதி நாள் வரையில் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். உண்மையோ, பொய்யோ… அந்த நேரத்து வறுமையைப் போக்கும் ஒரு ஃபேண்டஸி கனவோ தெரியாது. அந்த செவிவழிச் செய்தி எங்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும்...
பல வருடங்களுக்கு முன்னால், அமெரிக்காவில் பெண்கள் தங்கள் கரு முட்டைகளை விற்றனர். குறிப்பாக, மாணவிகள். இதனால் மிகப்பெரிய தொகை பெற்றுக்கொண்டு கடன் இல்லாமல் படிக்க முடிந்தது. ஆனால், அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் மரபணுக்கள் பல இடங்களில் பரவியிருந்தன. பெற்றோரும், நன்கு படிக்கிற, எந்தப் பரம்பரை நோயும் வர...
திருடனைத் திருடன் என்றால் குற்றம் என்பது போல ரஷ்யாவில் போரைப் போர் என்றால் நடவடிக்கை பாயும். சமீப காலம் வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையைப் போர் என்று ஒப்புக் கொள்ளவில்லை ரஷ்யா. போருக்கு எதிராக யார் கருத்துத் தெரிவித்தாலும் நடவடிக்கை பாய்ந்தது. இரண்டு வாரம் முன்பு ரஷ்யாவில் இருந்து தப்பித்துச்...
இருபது வருடங்களுக்கு முன்பு உலகப் பொருளாதாரத்தில் எழுபது சதவீதத்திற்கு மேலாக பளபளப்பு மிகு எஜமானனாக ஆதிக்கம் செலுத்தி வந்த டாலரின் வகிபாகம், சைனா- சவூதி- ரஷ்யா கூட்டால் ஐம்பத்தொன்பது சதவீதத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. உலக சந்தையிலிருந்து டாலரைக் காலியாக்கும் திட்டத்துடன் இக்கூட்டணி அமோக வீச்சில்...
மன்னராட்சியோ மக்களாட்சியோ… நோக்கம் ஒன்றுதான். தத்தம் நாடுகளை பாதுகாத்துக் கொள்வது. வலிமையும், வாய்ப்பும் அமைந்தால் அடுத்த நாட்டையும் வளைத்துப் போட்டு விடுவது. பல்லிருக்கிறவன் பாதுஷா மட்டுமா சாப்பிடுவான்? நேட்டோ கூட்டணியில் 31வது நாடாக இணைந்திருக்கிறது பின்லாந்து. இது ஒரு வரலாற்று...
உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு, சீட் பெல்ட்களை இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள். நாம் நுழையப்போவது உக்ரைன் போர்க்களத்துக்குள். இடம்: உக்ரைனுக்குள் இருக்கும் ரஷ்ய இராணுவத்தளம் ரஷ்யப்படைகளுக்கு எரிபொருள் மற்றும் வெடிகுண்டுகளின் தட்டுப்பாடு இருப்பதை முன்பே பார்த்தோம் இல்லையா? ஒருவழியாக இன்னும்...