மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே மூன்று பாக்கெட்டுகள் வரிசையாக ஹேண்ட்பேக் ஒன்றில் இருந்தால் அது பிர்கின் ஹேண்ட்பேக் என்பதற்கு அடையாளம். சன்னமான பெல்ட் ஒன்று தனது ஸ்டைலான பக்கிளுடன்...
Tag - ஐரோப்பா
ஐரோப்பாவின் முதல் யுனிவர்சல் தீம் பார்க், இங்கிலாந்தில் அமைக்கப்படவுள்ளது. இச்செய்தி பொழுதுபோக்கு விரும்பிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்பெரும் திட்டம், பிரிட்டனின் பொருளாதாரத்திற்கும், சுற்றுலாத் துறைக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...
“உக்ரைனியர்கள் தங்களை இன்னும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க உதவிக்காகக் காத்திருப்பது எதிர்காலத்தில் உதவாது. அதனால் ரைன்மெட்டல் குழுமம் அவர்களுக்கென ஒரு ஆயுதத் தொழிற்சாலையைத் தொடங்கவுள்ளது” என்று சென்ற வருடம் ஒரு பேட்டி அளித்திருந்தார் ஆமின் பாப்பெர்ஜெர், ஜெர்மனியின்...
“என்னைக் குதிரை லாயத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். அங்கு ஒரு தொழுவத்தில் குதிரை இருந்தது. இன்னொரு தொழுவத்தில் குதிரை போலவே நீண்ட முடியும், தாடியும் கொண்ட ஒரு மனிதர் இருந்தார். கூடிய விரைவில் எனக்கும் அதே கதிதான் என்பது புரிந்து விட்டது.” சிரியாவில் வாழ வழியில்லாமல், லிபியா வழியாக...
விளைநிலத்தை உழும் டிராக்டர்கள், ஐரோப்பாவின் முக்கிய நெடுஞ்சாலைகளை நிறைத்திருக்கிறது. மண்ணைத் தளர்த்தி, விதையிடத் தயாரிப்பதே உழுதல். சட்டங்களைத் தளர்த்த, ஆட்சியாளர்களைத் தயாரிக்கவே நிறுத்தப்பட்டுள்ளன இந்த டிராக்டர்கள். விவசாயம், விவசாய இனம், இரண்டும் நீடித்திருக்கவே ஐரோப்பிய விவசாயிகள்...
சிவகாசியின் முதலாவது தீப்பெட்டி ஆலை நிறுவப்பட்டு இந்த வருடத்துடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. வேளாண்மை செய்வதற்குத் தகுதியற்ற நிலமானாலும் கணிசமான அளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிற தொழில் கேந்திரமாக இருக்கின்றது சிவகாசி. கந்தக பூமி என்றும் குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும்...
பவழக்காரத் தெருவில் ஒரு காலத்தில் பவழ வர்த்தகம் இருந்திருக்கும். இன்றைக்கு? சரித்திரத்தை எண்ணிக்கொண்டு தற்கால வீதி ஒன்றனுள் நுழைவது ஒரு அனுபவம். ‘சந்தைத் தெரு’ என்று சொல்ல முடியாதபடி வீடுகளும் கடைகளுமாக கலந்திருக்கின்றன. வீடுகளைப் பொறுத்தவரை கலைநயத்தோடு கூடிய பழைய வீடுகளாக இருக்கின்றன. பர்மா வீடு...
2022 ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் வெப்ப நிலை முதல் தடவையாக 40°C க்கு மேலாகச் சென்று இதுவரை பதிவு செய்யப்பட்ட வெப்ப நிலைகளில் அதிகூடியதாக வரலாறு படைத்ததாக ஒரு கட்டுரை மெட்ராஸ் பேப்பரில் வெளியிட்டோம். இந்த ஆண்டு இதுவரை இங்கிலாந்தில் அந்தளவுக்கு வெப்பநிலை ஏறவில்லை. ஆனாலும் இவ்வாண்டு ஜூன் மாதம் சராசரி...
காலையில் அமைதியாய்ப் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள் திலிப்போன்சா. திடீரென அம்மாவின் ‘திலிப்போன்சா திலிப்போன்சா’ என்ற பதற்றமான குரலும் அவளை நிலத்தில் தள்ளிய கையும் புரியாமல் பாம்பு போல ஊர்ந்து அடுத்த அறைக்குள் அவளும் அம்மாவும் சென்று, அவளின் தம்பியைத் தூக்கிக்கொண்டு, புத்தகப்பையில் சில...
21 வயது நிகிதா, முக்கிய முடிவு ஒன்றை அன்றிரவே எடுத்தாக வேண்டும். ஒன்று உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்து போர் வீரனாவது. மற்றொன்று அனைத்தையும் விட்டுவிட்டு பிரிட்டனுக்குச் செல்வது; அகதியாய். தேர்வு எதுவாயினும், இனி வாழ்க்கை மாறத்தான் போகிறது. “வயலின் வாசித்த இந்தக் கைகளால், ஏ.கே.74 துப்பாக்கியேந்த...