Home » லிபியா: யாரைக் குறை சொல்வது?
உலகம்

லிபியா: யாரைக் குறை சொல்வது?

“என்னைக் குதிரை லாயத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். அங்கு ஒரு தொழுவத்தில் குதிரை இருந்தது. இன்னொரு தொழுவத்தில் குதிரை போலவே நீண்ட முடியும், தாடியும் கொண்ட ஒரு மனிதர் இருந்தார். கூடிய விரைவில் எனக்கும் அதே கதிதான் என்பது புரிந்து விட்டது.” சிரியாவில் வாழ வழியில்லாமல், லிபியா வழியாக ஐரோப்பாவிற்குச் செல்லும் கனவோடிருந்த மாலிக் கூறியவை இவை.

ஒரு குட்டைத் துப்பாக்கியைப் போலிருக்கும் ஆப்பிரிக்க வரைபடத்தில், பேரலைப் போல (துப்பாக்கியின் குழல்) அமைந்துள்ளது லிபியா. சுட்டவுடன், குண்டு இதுவழியாகப் பயணித்து இலக்கைத் தாக்கும். குண்டின் வேகத்தையும், பாதையையும், சேதாரத்தையும் முடிவு செய்வது இந்தப் பேரலின் வடிவமும், நீளமும்தான். அப்படிதான் லிபியாவும், பக்கத்து நாடுகளிலிருந்து அகதிகளாக வருவோரின் தலையெழுத்தையும் தீர்மானிக்கிறது.

வட ஆப்பிரிக்க நாடான லிபியா, ஐரோப்பாவையும், ஆசியாவையும் கள்ளத்தோணியில் அடையும் தூரத்தில் இருக்கிறது. இது போதாதா? சிரியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மக்கள் ஐரோப்பியக் கனவுகளோடு லிபியா வந்து சேருகிறார்கள். எகிப்தும், துனிசியாவும் இருபுறமும் இருக்க, கிரீஸ் மற்றும் இத்தாலி நாடுகள் எட்டிப் பிடிக்கும் தூரம்தான். சென்ற ஆண்டு மட்டும் லிபியாவிலிருந்து மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்தவர்கள் 45 ஆயிரம் பேர். இவர்களில் 10 ஆயிரத்து 600 பேர் சட்டவிரோதமான இந்தப் பயணத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இவர்களின் கதி என்னவென்று, லிபியாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!