பிரிட்டனின் மன்னராகி ஒன்றரை ஆண்டுகளே ஆகிறது. அதற்குள் மன்னர் சார்லசிற்கு உடல்நிலை காரணமாகப் பொதுக் கடமைகளிலிருந்து சில காலம் ஓய்வெடுக்கும் நிலைமை வந்து விட்டது. எழுபத்தைந்து வயதான ராஜா அண்மையில் புரஸ்டேட் சம்பந்தமான ஒரு சிகிச்சைக்குள்ளானார். அதன் பின்னர் அவருக்கு ஒரு வகையான புற்று நோய் இருப்பது...
Tag - உலகம்
ஒரு தேர்தல் எப்படி நடக்கக் கூடாதோ, கன கச்சிதமாக அப்படியே பாகிஸ்தானில் நடந்து முடிந்தது. பிப்ரவரி 8 அன்று தேர்தல். அதற்கு முதல் நாள் இரண்டு இடங்களில் கலவரம். சுமார ஐம்பது பேர் உயிரிழந்தார்கள். எனவே நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. லட்சக் கணக்கான இராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில்...
பாகிஸ்தானில் இம்ரான் கானுக்குப் போதாத காலம் எப்போதோ ஆரம்பமாகிவிட்டது. இப்போது நடப்பது, போதவே போதாத காலம். கட்டக்கடைசியாக அவர் செய்துகொண்ட மூன்றாவது திருமணம் இப்போது அவர் கழுத்தைப் பிடிக்கிறது. இஸ்லாமிய விதிமுறைகளை மீறி நடந்த திருமணம் என்பது குற்றச்சாட்டு. அதுசரி. ஒழித்துக்கட்டிவிடுவது என்று முடிவு...
தேர்தல் திணைக்களம் ஜனாதிபதி ரணிலுக்கு ஞாபகப்படுத்திவிட்டது. ஆம். இது இலங்கைக்குத் தேர்தல் ஆண்டு.அரசியல் சாசனப்படி நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்தல் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 17ம் தேதிக்கும், அக்டோபர் 17ம் தேதிக்குமிடையில் நடத்தியே ஆகவேண்டும். இலங்கைக்கு என்று ஒரு...
பெரிய புயல் காற்று, சோலையைக் கடக்கும் போது எண்ணற்ற இளம் செடிகள் சீற்றம் தாளாது கீழே விழுவதைப் புயல் அறியாது. அதே போலச் சமூக மாற்றங்கள் நிகழும்போது பக்க விளைவுகளாகப் பல விபரீதங்களும் நிகழும். காலப்போக்கில் அரசியல் சட்டங்களும் சுமூக விதிகளும் தீயன குறைத்து நல்லதை அதிகரித்து மாற்றங்களை நிலைக்கச்...
மாலத்தீவின் ஜனாதிபதி முய்ஸு சீன அதிபரோடு கைகுலுக்கிய கையோடு இருபது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுவிட்டு வந்து சில தினங்கள்தான் இருக்கும். சியாங் யாங் ஹாங் 3 என்று பெயரிடப்பட்ட சீனக் கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளைய வந்துகொண்டிருந்தது. நிச்சயம் அது ராணுவக் கப்பல் இல்லை. சீன ஆராய்ச்சிக்...
1 .40 பில்லியின். ஜனவரி 17 ஆம் தேதிப்படி சீனாவின் மக்கள் தொகை. இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மில்லியன் குறைவு. ஒரு காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த திணறிய அதே சீனாவில் தான் இப்போது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஜனத்தொகை சரிந்து வருகிறது. குழந்தை பிறப்பு விகிதமும்...
பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டுக்குள் நம்மைத் தனிமைப்படுத்தவே அரசுகள் பெரும்பாடுபட்டன. கடுமையான சட்டங்கள் மூலம் தன் நாட்டையும் மக்களையும் வடகொரியா தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது. கெடுபிடிகளை மீறித் தென்கொரியாவின் படங்களைப் பார்த்தார்கள், பாப் இசையைக் கேட்டார்கள் என்று பதின்ம வயது இளைஞர்கள்...
அக்டோபர் ஏழு தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக ஹமாஸ் பதினெட்டுப் பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தங்கள் தரப்பினை முன்வைத்துள்ளது. ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஐந்தாகப் பிரித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளது ஹமாஸ். பற்றுறுதிமிக்க பாலஸ்தீனியர்கள், அரபு முஸ்லிம்...
நார்னியா திரைப்படத்தில் அலமாரிக்குள் இருந்து ஒரு ராஜ்ஜியம் விரியும் காட்சியை வைத்திருப்பார்கள். வெளியுலகத்தோடு தொடர்பில்லாதவொரு மாயாஜாலம் பொருந்திய மர்ம பேரரசு. நூற்றாண்டுக் காலமாக அந்த இடத்தைக் குளிர்காலத்தில் வைத்து ஆட்செய்யும் கொடுங்கோல் என்ற வகையில் அதன் கதை இருக்கும். வட கொரியா, நிஜ உலகத்தின்...