பென்சில்வேனியாவில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவின் செனெட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடனுக்கு இரண்டு சிறப்புத் தகுதிகள் உண்டு. அமெரிக்க செனெட்டர்களிலேயே மிகக் குறைந்த வயதில் (29) தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும், அமெரிக்க அதிபர்களிலேயே மிக அதிக வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும்...
Tag - உலகம்
அயர்லாந்து பொதுவாக ஒரு அமைதியான நாடு. அதன் அழகான தலைநகரம் டப்ளினும் இதுவரை காலத்தில் அமைதியான நகரமாகவே கருதப்பட்டு வந்தது. அது மட்டுமல்லாமல் மற்றைய ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது தீவிர வலதுசாரிக் கட்சிகளும் அந்நாட்டில் பெரிதாகத் தலையெடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எமது சொந்த...
ஒரு வாரம் இடைவெளி கொடுத்து 110 பணயக் கைதிகளை மீட்டது இஸ்ரேல். பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டவரும். 240 பாலஸ்தீனியர்கள் விடுதலை ஆனார்கள். ஹமாஸிடம் மீதம் இருக்கும் 140 பணயக் கைதிகள் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் ஆண்கள். ஒருவார இடைவெளிக்குப் பிறகு இஸ்ரேல் தொடங்கிய தாங்குதல்...
கடைகளில் உங்களுக்கு மிகவும் தேவையாக இருக்கும் அல்லது பிடித்தமான மிக அதிக விலையுள்ள பொருள், 80 சதவீதத் தள்ளுபடியில் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் கிடைக்கும் என்றால் என்ன செய்வீர்கள்? எப்படியாவது வாங்கிவிடலாம் என்று நினைப்பீர்கள்தானே? அதுவும் விடுமுறை அன்று, வருடக்கடைசியில் வரும் மிக...
ஒரு ஸ்டாக்கின் விலை மட்டும் 4.5 கோடி. கேட்கும் போதே தலைசுற்றுகிறதா? அது தான் பெர்க்சயர் ஹாத்வே A (Berkshire Hathway A). அதன் உருவாக்கத்திற்குச் சொந்தக்காரர்கள் மற்றும் காரணமானவர்கள் வாரன் பஃபெட்டும் (Warren Buffett) அவரின் வலது கை, படைத்தளபதி இப்படிப் பல்வேறு பட்டத்திற்குச் சொந்தக்காரரான சார்லி...
டீ பார்ட்டி கட்சியின் பெயரே, பாஸ்டன் டீ பார்ட்டி என்ற சரித்திர மகத்துவம் வாய்ந்த அரசியல் போராட்டத்தின் பெயரைக் கொண்டது. அநியாயத்தை எதிர்த்து போரிட்ட நிகழ்வு! இங்கிலாந்துப் பாராளுமன்றம், அமெரிக்கக் காலனிகள் பயன்படுத்தும் தேயிலைகளின் மீது வரி சுமத்தியதை எதிர்த்து 92000 பவுண்ட் எடையுள்ள தேயிலையைக்...
துபாய் என்றதும் ஆயிரெத்தெட்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். பிரமாண்டமான கட்டடங்கள் கொண்ட ஷேக் ஜாயித் சாலையைக் கடக்காமல் துபாயை யாரும் தரிசித்திருக்க முடியாது. பதினான்கு வழிச் சாலையில் எப்போதும் வாகன நெரிசல் இருக்கும். ஆனால் சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்தச் சாலையில் ஆரஞ்சு நிறத்தில் மக்கள் வெள்ளம்போல்...
ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அதிபர் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதிபர் பைடன், இஸ்ரேல் காஸா போர் குறித்து எடுக்கும் முடிவுகள் அவரின் வருங்காலத் தேர்தலின் வெற்றியைப் பாதிக்கலாம். அமெரிக்காவில் வாழும் யூதர்களின் மக்கள் தொகை, அதிலும் தேர்தலுக்கு நன்கொடை அளிக்கும் யூதர்களின் எண்ணிக்கை மிக...
தேர்வுக்கூடத்தி்ல் டீச்சரிடம் பேப்பர்களை ஒப்படைக்கக் கடைசி ஐந்து நிமிடம் என்று மணி அடித்ததும் இன்னும் தீவிரமாக எழுதுவார்கள் சில மாணவர்கள். அப்படி போரில் ஒரு இடைவெளி ஒப்பந்தம் முடிவானதும் அது தொடங்கும் நேரத்துக்குச் சிலமணி நேரம் முன்பு கூட ஐநா பள்ளிக்கூட த்தின் மீது குண்டு வீசி 27 பேரைக் கொன்றது...
ஒரு நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவ வலியும் வந்துவிட்டது. அவசர ஊர்தியையும் அழைத்தாயிற்று. ஆனால் அந்த வண்டி வரக் கூடிய அளவு சீரான பாதை இல்லை. கர்ப்பிணியுடன் தங்கள் வண்டியிலேயே அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள். வண்டிச் சக்கரம் பழுதடைந்து விடுகிறது. வேறு வழியே இல்லாமல், நிறைந்த இரவில், கழுதைப் புலிகளின்...