Home » கண்ணைத் திறக்குமா கலவரம்?
உலகம்

கண்ணைத் திறக்குமா கலவரம்?

அயர்லாந்து பொதுவாக ஒரு அமைதியான நாடு. அதன் அழகான தலைநகரம் டப்ளினும் இதுவரை காலத்தில் அமைதியான நகரமாகவே கருதப்பட்டு வந்தது. அது மட்டுமல்லாமல் மற்றைய ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது தீவிர வலதுசாரிக் கட்சிகளும் அந்நாட்டில் பெரிதாகத் தலையெடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எமது சொந்த அனுபவத்திந்படி ஐரிஷ்காரர்களில் பெரும்பாலோனோர் மிகவும் நட்புடன் பழகக்கூடியவர்கள்.

இப்படியான அமைதியான டப்ளின் மாநகரத்தின் ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றின் முன்னால் நவம்பர் இருபத்து மூன்றாம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் ஒன்றரை மணியளவில் ஒரு குற்றச் சம்பவம் நடந்தது. அதன் பின்விளைவாக மாலையில் டப்ளின் மாநகரம் அண்மைக் காலங்களில் கண்டிராத கலகத்தைக் கண்டது. அயர்லாந்து மொழியில் கார்டா என அழைக்கப்படும் அந்நாட்டுப் போலீஸாரால் அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இடம் பெற்ற கலகத்தை அடக்கச் சில மணி நேரங்களாகியது. அதற்குள் கிட்டத்தட்டப் பதின்மூன்று கடைகள், பதினொரு போலீஸ் வாகனங்கள், மூன்று பஸ்கள், ஒரு ட்ராம் வண்டி ஆகியன கலகக்காரர்களினால் நாசமாக்கப் பட்டன. அது மட்டுமல்லாது பல போலிஸாரும் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குள்ளானார்கள். சிலர் வைத்தியசாலைக்குப் போக வேண்டியளவு காயப்பட்டனர்.

இப்படி ஒரு வரலாற்றில் இடம் பெறும் கலகம் உருவாகக் காரணமான சம்பவம் என்னவென்று பார்ப்போம். இச்சம்பவத்தில் நாற்பதுகளில் அல்லது ஐம்பதுகளில் உள்ள ஒரு மனிதர் கத்தியினால் சிலரைக் குத்தினார். இச்சம்பவத்தில் ஒரு ஐந்து வயதுச் சிறுமியும் முப்பதுகளில் உள்ள சிறுவர் பராமரிப்புப் பணியிலுள்ள பெண்ணும் கத்திக் குத்தினால் கடுமையான பாதிப்படைந்தனர். மேலும் இரு சிறுவர்கள் ஆறு வயதுச் சிறுமியும் ஐந்து வயதுச் சிறுவனும் சிறிய காயங்களுக்கு உள்ளானார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!