Home » பூமியின் சாம்பியன்கள்!
உலகம்

பூமியின் சாம்பியன்கள்!

ஒரு நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவ வலியும் வந்துவிட்டது. அவசர ஊர்தியையும் அழைத்தாயிற்று. ஆனால் அந்த வண்டி வரக் கூடிய அளவு சீரான பாதை இல்லை. கர்ப்பிணியுடன் தங்கள் வண்டியிலேயே அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள். வண்டிச் சக்கரம் பழுதடைந்து விடுகிறது. வேறு வழியே இல்லாமல், நிறைந்த இரவில், கழுதைப் புலிகளின் ஊளைகளுக்கிடையில் நட்ட நடுக்காட்டில் குழந்தையைப் பெற்றாள் அந்தத் தாய்.

கேட்பதற்கு ஒரு புனைவைப் போல இருக்கிறதல்லவா? ஆனால் இது தென்னாப்பிரிக்காவில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். ஆப்பிரிக்கப் பெண்கள் மிகுந்த உடல் வலுவும் மன உறுதியும் கொண்டவர்கள் என்பது உலகப் பிரசித்தம் என்றாலும் இந்தச் சூழல் யாரையும் திகிலுக்கு உள்ளாக்கக்கூடியதுதான். இருப்பினும் இரவு ரோந்துப் பணியில் இருந்த பிளாக் மாம்பாஸ் வனக் காவலரான அந்தத் தாய்க்கு இது அவரது கடமைகளில் ஒரு பகுதி.

தென்னாபிரிக்காவின் மிகப் பிரபலமான க்ரேட்டர் க்ருகர் தேசியப் பூங்காவின் மேற்கில் ஒரு பகுதி பலுலே நிலப்பரப்பு. இது ஐம்பத்து ஆறாயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்டது. ஆப்பிரிக்காவுக்கே உரித்தான யானைகள், வெள்ளை மற்றும் கறுப்புக் காண்டாமிருகங்கள், சிங்கங்கள், கழுதைப் புலிகள், ஒட்டகச் சிவிங்கிகள் மற்றும் பல அருகி வரும் வன விலங்குகளின் சரணாலயம். பிளாக் மாம்பாஸ் ஆன்டி போச்சிங் யூனிட் (Black mambas Anti Poaching Unit) அமைப்பு உருவாக்கப்பட்ட இரண்டாயிரத்துப் பதின்மூன்றாம் ஆண்டுவரை சட்டம் மற்றும் சமூக விரோதமான விலங்கு வேட்டைக்குப் பழகிப் போய் இருந்த பகுதியும் கூட.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!