மாலத்தீவின் ஜனாதிபதி முய்ஸு சீன அதிபரோடு கைகுலுக்கிய கையோடு இருபது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுவிட்டு வந்து சில தினங்கள்தான் இருக்கும். சியாங் யாங் ஹாங் 3 என்று பெயரிடப்பட்ட சீனக் கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளைய வந்துகொண்டிருந்தது. நிச்சயம் அது ராணுவக் கப்பல் இல்லை. சீன ஆராய்ச்சிக்...
Tag - உலகம்
1 .40 பில்லியின். ஜனவரி 17 ஆம் தேதிப்படி சீனாவின் மக்கள் தொகை. இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மில்லியன் குறைவு. ஒரு காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த திணறிய அதே சீனாவில் தான் இப்போது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஜனத்தொகை சரிந்து வருகிறது. குழந்தை பிறப்பு விகிதமும்...
பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டுக்குள் நம்மைத் தனிமைப்படுத்தவே அரசுகள் பெரும்பாடுபட்டன. கடுமையான சட்டங்கள் மூலம் தன் நாட்டையும் மக்களையும் வடகொரியா தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது. கெடுபிடிகளை மீறித் தென்கொரியாவின் படங்களைப் பார்த்தார்கள், பாப் இசையைக் கேட்டார்கள் என்று பதின்ம வயது இளைஞர்கள்...
அக்டோபர் ஏழு தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக ஹமாஸ் பதினெட்டுப் பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தங்கள் தரப்பினை முன்வைத்துள்ளது. ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஐந்தாகப் பிரித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளது ஹமாஸ். பற்றுறுதிமிக்க பாலஸ்தீனியர்கள், அரபு முஸ்லிம்...
நார்னியா திரைப்படத்தில் அலமாரிக்குள் இருந்து ஒரு ராஜ்ஜியம் விரியும் காட்சியை வைத்திருப்பார்கள். வெளியுலகத்தோடு தொடர்பில்லாதவொரு மாயாஜாலம் பொருந்திய மர்ம பேரரசு. நூற்றாண்டுக் காலமாக அந்த இடத்தைக் குளிர்காலத்தில் வைத்து ஆட்செய்யும் கொடுங்கோல் என்ற வகையில் அதன் கதை இருக்கும். வட கொரியா, நிஜ உலகத்தின்...
கடந்த ஜனவரி பதினெட்டாம் தேதி இரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் என்ற செய்தி வந்து, நாமெல்லாம் சிறிது வியப்புடன் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தோம். பொதுவாகப் பாகிஸ்தான் தாக்குவதென்றால் நம் பக்கம்தானே திரும்பும், இதென்ன புதிதாக இரானுடன் மோதுகிறது என்று வியந்தோம். வியப்புக்கு இன்னொரு காரணம், இப்போது...
பத்தாண்டுகளுக்கு முன்னர் எடுத்த உத்தியோகபூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மியன்மர் நாட்டின் மக்கள் தொகை ஐம்பத்தொரு மில்லியன். தற்போது அது ஐம்பத்தைந்து மில்லியன்களை எட்டியிருக்கலாம். இதில் கிட்டத்தட்ட எண்பது சதவீதமானோர் புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து சமயம்...
பல மாதங்களாகப் பரப்புரைகள், விவாதங்கள், நகரசபைக் கூட்டங்கள், நிதி திரட்டுதல் ஆகியவற்றுக்குப் பிறகு, குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் ஜனவரி 17அன்று தங்கள் முதல் தேர்தல் களத்தை அயோவாவில் எதிர்கொண்டனர். இவாஞ்சலிக்கள்(evangelics), தீவிர வெள்ளை நிற இனப்பற்றாளர்கள் ஆதரவுடன், ‘எலும்பை...
கிட்டத்தட்ட வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டுக் காளையின் மனநிலையில் தான் ஈரான் இருந்திருக்கவேண்டும். சிரியா, ஈராக், பாகிஸ்தான் என அருகிலுள்ளவர்களைக் கடந்த வாரம் சகட்டுமேனிக்கு முட்டி தள்ளியிருக்கிறது. பாகிஸ்தானின் பலோசிஸ்தான் பகுதியில் ஜனவரி 16-ஆம் தேதி ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்...
“பிரிட்டனில் பல ஏழைக் குழந்தைகள் சிறுவயதில் புத்தகம் கிடைக்காததால், வாழ்நாள் முழுவதற்கான வாசிப்பின்பம் கிடைக்காமல் தவறவிடுகின்றனர்.” என்று கவலைப்பட்டிருக்கிறார் புகழ்பெற்ற குழந்தைகள் எழுத்தாளர் மைக்கேல் மார்பர்கோ. (Michael Morpurgo) எண்பது வயதான மைக்கேல், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் குழந்தை...