கடைசியில் அது நடந்துவிட்டது. நாம் இரண்டு வருடங்களுக்கு முன்பே கணித்தது போல ஜே.வி.பி தலைவரும், தேசிய மக்கள் கூட்டணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வாகி இருக்கிறார். எந்தவித பிரபுத்துவப் பின்னணியுமில்லாத ஒரு பிசிக்ஸ் பட்டதாரி இலங்கையின் அதியுயர் பதவிக்குத்...
Tag - இலங்கை அரசியல்
வரப்போகும் அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வெற்றியைக் கொடுக்க ஆயிரத்து 207 அலுவலகங்களைத் திறக்கப் போகிறார்களாம்- அதுவும் பத்து நாள்களுக்குள். திறக்கட்டும். இடையில் ஒருவர் நீதிமன்றத்தில் அதிபர் தேர்தலை வேலைகளை நிறுத்தி வைக்க மனுப்போட்டிருக்கிறார். சிரிசேனா அதிபராக இருந்தபோது 19-ஆவது...
தேர்தல் நடக்குமா நடக்காதா என்று ஒரு தேசத்தின் மக்கள் குழம்பிப் போவதைப் போன்ற அபாக்கியம் வேறெது இருக்க முடியும்? இலங்கையில் ஜனாதிபதி ரணிலின் அண்மைய நகர்வுகள் எதுவுமே நம்பும்படியாய் இல்லை. இது தொடர்பான விரிவான கட்டுரையை முன்பு வெளியிட்டிருந்தோம். தனது அடிப்பொடிகளைப் பயன்படுத்தி மேலும் இரண்டு...
‘நான் தோற்கின்ற சூது ஆடுவதில்லை. தேர்தல் வைப்பதே வெல்வதற்குத்தான்’ என்பது மகிந்த ராஜபக்சேவின் பொன்மொழிகளில் ஒன்று. தேர்தல் காலண்டரை அவரளவுக்கு மிகச் சாதுரியமாய்ப் பயன்படுத்தியவர்கள் யாருமில்லை. அவரது கிட்டத்தட்டப் பத்து வருட கால ஆட்சியில் வட மாகாண சபைத் தேர்தலைத் தவிர மற்ற அத்தனைத்...
என்னதான் இலங்கை சுதந்திரம் பெற்ற தேசம் என்றாலும், சொந்த முயற்சியில் கெட்டுச் குட்டிச்சுவரானாலும் இலங்கை அரசியலை இத்தனை நாளாய்த் தீர்மானித்ததில் இந்தியாவின் ஆதிக்கமும் பங்களிப்பும் மகத்தானது. இதற்கு வரலாறு எங்கும் பல நூறு சான்றுகள் சொல்லலாம். மிக அண்மைய உதாரணம், இலங்கையில் அடுத்த ஜனாதிபதித்...
உண்மையில் மகிந்த ராஜபக்சேவைப் பிரதம வேட்பாளராய் நியமிப்பதைவிட லக்ச்மன் கதிர்காமரை நியமிக்கவே ஜே.வி.பி விரும்பியது. ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நடந்த தனிப்பட்ட சந்திப்புக்களிலும் சரி, சுதந்திரக் கட்சியுடன் நடந்த உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தைகளிலும் சரி, தம் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாய் அறிவித்தது ஜே...
தேர்தல் திணைக்களம் ஜனாதிபதி ரணிலுக்கு ஞாபகப்படுத்திவிட்டது. ஆம். இது இலங்கைக்குத் தேர்தல் ஆண்டு.அரசியல் சாசனப்படி நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்தல் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 17ம் தேதிக்கும், அக்டோபர் 17ம் தேதிக்குமிடையில் நடத்தியே ஆகவேண்டும். இலங்கைக்கு என்று ஒரு...
பதினேழு வருட கால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை மீட்டிப் பார்த்தால் தெரியும்.சர்வதேசத்தில் இலங்கையை நரமாமிசம் சாப்பிடும் அகோரிகள் வாழும் தேசம் போல மாற்றிவிட்டுத்தான் அதன் தலைவர்கள் ஓய்ந்து போனார்கள்.உலகத்திற்கு அதிகளவில் அகதிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாய்ப் போனது இலங்கை. அரச வளங்கள்...
மகிந்த ராஜபக்சே மர முந்திரிகை மரத்தின் உச்சியில் இருந்து இறங்கி வரும் வரை கையில் பிரம்போடு இருந்தார் அம்மா. ஆனால் அவரோ, ‘நீங்களும் அப்படியே நில்லுங்கள், நானும் இப்படியே இருக்கிறேன்.இந்த ஜென்மத்தில் இறங்கப் போவதில்லை’ என்று திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார். வேறு என்ன வழி..? வெள்ளைக் கொடியேற்றி, சமாதான...
‘இனி அவ்வளவுதான். எல்லாம் முடிந்தது. பொது வேட்பாளர் சிரிசேனா வென்றுவிட்டார். இதற்கு மேலும் தாக்குப் பிடிப்பதில் பலனில்லை. அறிவித்து விடலாம்தான். எப்படி அறிவிப்பது..? மக்களோ பழங்கால இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போல அத்தனை பரபரப்பாய்த் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்...