Home » ப்ரோ – 2
தொடரும் ப்ரோ

ப்ரோ – 2

மகிந்த ராஜபக்சே மர முந்திரிகை மரத்தின் உச்சியில் இருந்து இறங்கி வரும் வரை கையில் பிரம்போடு இருந்தார் அம்மா. ஆனால் அவரோ, ‘நீங்களும் அப்படியே நில்லுங்கள், நானும் இப்படியே இருக்கிறேன்.இந்த ஜென்மத்தில் இறங்கப் போவதில்லை’ என்று திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார். வேறு என்ன வழி..? வெள்ளைக் கொடியேற்றி, சமாதான சொரூபியாகி, தண்டனையை வாபஸ் வாங்கிக் கொண்டார் அந்தத் தாய். மகிந்த இறங்கி வந்தார். அவருக்கு நிபந்தனை முக்கியம். மரத்தில் ஏறினாலும் சரி, அதிகார அடுக்குகளில் ஏறினாலும் சரி..

எப்போது பர்த்தாலும் சகோதரர்களுடன் சண்டை. எதைத் தொட்டாலும் சச்சரவு. அவ்வளவு ஏன்… நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடப் போனாலும் முதலில் துடுப்பு மட்டையைக் கொடுத்துவிட வேண்டும்.அப்படி இல்லாவிட்டால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அந்த இடத்தையே யுத்தக் களமாக்கி விடுவார். எதிர்த் தரப்பு ஆக்ரோஷமாய் எதிர்வினையாற்றினால் அம்மாவின் முந்தானையைப் பிடித்துத் தொங்கிக் காரியத்தைச் சாதித்துவிடுவார் மகிந்த. சரி யாருமே எதற்குமே மசியவில்லையா..? உடனே ப்ளக் மெய்ல் செய்வார். ஒருமுறை தன்னைக் கிரிக்கெட் விளையாட அனுமதிக்காவிட்டால் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார் மகிந்த. தாயார் அதைக் கணக்கில் எடுக்கவே இல்லை. விறுவிறு என்று கொல்லைப்புறத்தை நோக்கி ஓடத் தொடங்கினார் .பிராந்தியம் அதிரும் பெரும் சத்தம் ஒன்று கேட்டது. மகன் அவ்வளவுதானா? என்று பதைபதைத்துப் போனது தாய் உள்ளம். எல்லோரும் கிணற்றைச் சுற்றி நின்று கொண்டிருந்த போது புதர் மறைவில் இருந்து வெளிப்பட்ட மகிந்த, ‘கிணற்றில் கல்லைத் தூக்கிப் போட்டேன். நான் அத்தனை சீக்கிரத்தில் சாகமாட்டேன்’ என்றவாறு அத்தனை பேரையும் கிலியூட்டினார். இப்படித்தான் மகிந்த. பிடிவாதக் குணத்தில் அவரை அடித்துக் கொள்ள பேட்டையில் யாருமில்லை.நினைத்ததைச் சாதிக்காமல் அவர் எக்காலத்திலும் ஓய்ந்ததே இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • சிரித்து சிரித்து முடியவில்லை. இப்படியே விறுவிறுப்போடு தொடரவும்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!