Home » ப்ரோ – 19
தொடரும் ப்ரோ

ப்ரோ – 19

உண்மையில் மகிந்த ராஜபக்சேவைப் பிரதம வேட்பாளராய் நியமிப்பதைவிட லக்ச்மன் கதிர்காமரை நியமிக்கவே ஜே.வி.பி விரும்பியது. ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நடந்த தனிப்பட்ட சந்திப்புக்களிலும் சரி, சுதந்திரக் கட்சியுடன் நடந்த உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தைகளிலும் சரி, தம் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாய் அறிவித்தது ஜே.வி.பி. காரணம் கொஞ்சம் ஆழமானது.

தமிழரான லக்ச்மன் கதிர்காமர் கீர்த்திமிகு ராஜதந்திரி.சந்திரிக்கா அரசில் வெளிநாட்டமைச்சராய் உலகம் சுற்றிக் கொண்டிருக்காமல் படுகாத்திரமான சாதனைகள் பல செய்தவர். பல வருடங்களாய் சர்வதேசமெங்கும் சேதாரமாகியிருந்த சிங்கள அரசின் இமேஜை சாத்தியமான அத்தனை தருணங்களிலும் உயர்த்தியவர். இனப் பிரச்னையில் சிங்கள சமூகம் தம் பக்கமிருக்கும் நியாயங்கள் என்று நம்பிக்கொண்டிருந்த நிலைப்பாடுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தவர். எல்லாவற்றையும் தாண்டிப் புலிகள் இயக்கத்தை உலக நாடுகள் தடை செய்ய பம்பரமாய்ச் சுழன்றவர்.

மேலும் தம்மீது தமிழர் தரப்பு கொண்டிருக்கும் சிங்கள இனவாத விம்பத்தை லக்ச்மன் கதிர்காமரைப் பிரதமராக நியமிப்பதன் மூலம் முற்றாய்க் கழுவித் துடைத்துவிடலாம் என்றெல்லாம் ஜே.வி.பி நம்பவில்லை. ஜே.வி.பி-க்கு கதிர்காமரைத் தெரியும். சிங்களவரைப் போலச் சிந்திக்கும் தமிழர் அவர். ஆகவே ஜே.வி.பி.-யின் நிலைப்பாட்டுக்கு பாராளுமன்றத்திற்கு வெளியே மைக் மோகன் அரசியல் செய்து கொண்டிருந்த துறவிகளும் சரி, இதர பேரினவாதக் கும்பல்களும் சரி…. எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!