Home » இந்தியா » Page 8

Tag - இந்தியா

இந்தியா

செய்தது நீதானா? சொல், சொல்!

மே 15, அதிகாலை. போர்கும் (Borkum) சரக்குக் கப்பலை ஸ்பானியக் கடற்கரையில் சிலர் நிறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் கார்டேஜினா நகரக் கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் நின்றது அந்தக் கப்பல். பாலஸ்தீனியக் கொடிகளை அசைத்து கப்பலை நிறுத்திய எதிர்ப்பாளர்கள் இந்தக் கப்பல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொண்டு...

Read More
இந்தியா

தாகத்தில் தவிக்கும் தலைநகரம்

தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது ஒவ்வோராண்டு கோடையின் போதும் டெல்லி மக்கள் சந்திக்கும் பிரச்சனை. ஆம் ஆத்மி, பி.ஜே.பி. சண்டையில் நாடு முழுக்க அதைப் பற்றித் தெரிய வந்திருக்கிறது. இதில் சூரியனுக்கு இருக்கும் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த ஆண்டு கோடையின் தாக்கம் அதிகம். வட இந்திய மாநிலங்களில்...

Read More
இந்தியா

பிரியங்கா: வருகிறது ஒரு வலுவான எதிர்க்குரல்

1984-ஆம் ஆண்டு இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது பிரியங்கா காந்திக்கு வயது 12. அப்போது டேராடூனில் வெல்ஹம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 1991-ஆம் ஆண்டு பிரியங்காவின் தந்தை ராஜீவ் காந்தியும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். பாதுகாப்புக்...

Read More
இந்தியா

காஷ்மீர்: மீண்டும் தலையெடுக்கும் தலைவலி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஷ்மீர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. மூன்று நாள்களில் மூன்று பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்ததே இதற்குக் காரணம். கடந்த வாரம் வரை தேர்தல் பரப்புரையில் சொல்லப்பட்ட புள்ளிவிவரங்களின்படி அமைதிப் பூங்காவாக இருந்தது காஷ்மீர். மோடியின் சாதனைகளில் முதன்மையான ஒன்றாகச்...

Read More
இந்தியா

மணிப்பூர்: மீண்டும் கலவரம்?

அரசுத் தகவலின் படி 221 பேர் இறந்துபோகவும் அறுபதாயிரத்துக்கும் அதிகமானோர் உடைமைகளையும் இருப்பிடங்களையும் இழக்கவும் காரணமான மணிப்பூர்க் கலவரம் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. மெய்தி இன மக்களைப் பட்டியல் இனத்தில் சேர்க்கப் பரிந்துரைக்கிறோம். மணிப்பூர் மாநில உயர் நீதிமன்றம் அந்த மாநிலத்தை ஆளும் பா...

Read More
இந்தியா

ஒரு பாறையும் இரு பாதைகளும்

அது பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதி. இந்தியா அப்போது வறுமை, நோய், அச்சம், பாதுகாப்பின்மை, கவலை, தன்னம்பிக்கையின்மை, பட்டினி ஆகிய கொடிய ஆற்றாமைகள் பலவற்றிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலம். உலகை அஞ்சி தன்னுள் சுருண்டு கொண்டிருந்த இந்த ஞானபூமிக்கு அந்த நாளில் விவேகம் கொண்டு எழுப்புதல்...

Read More
இந்தியா

மோடியின் காலம்: பத்தாண்டுகளும் பத்து பெரிய தவறுகளும்

மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றுள்ளார் மோடி. செங்கோலை ஏந்திய கைகள் அரசியல் சாசனத்தை வணங்கின. “எண்ணிக்கைகள் அல்ல, ஒருமித்த கருத்தே ஆட்சியை நடத்தத் தேவை” என்று பேசினார்.  கடந்த பத்தாண்டுகளில் காணாத பிரதமரை நாடு தற்போது காண்கிறது. இந்த மிதவாத முகம் எத்தனை நாள் தொடரும் என்பது விடை தெரியாத கேள்வி...

Read More
இந்தியா

ஆந்திரம்: ஒரு ‘தலை’யாய சிக்கல்

ஹைதராபாத் இனிமேல் ஆந்திராவின் தலைநகர் கிடையாது. அதுதான் பத்தாண்டுகள் முன்பே தெரியும் என்கிறீர்களா? உண்மைதான். இந்த இடைவெளியில் இன்னொரு தலைநகர் உருவாகியிருந்தால் இச்செய்தி எந்த முக்கியத்துவமும் இன்றிக் கடந்து போயிருக்கும். அரசியல் காரணங்களால் மாற்றி மாற்றி அறிவிப்புகள் வெளியிட்டுத் தற்போது தலைநகரே...

Read More
இந்தியா

துருவ் ரதே: பாஜகவின் புதிய வில்லன்

டெல்லியைக் கைப்பற்ற உத்தரப் பிரதேசம் முதல் படி. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் அனாயாசமாக வாரிச் சுருட்டிய பா.ஜ.க., இம்முறை அடி சறுக்கியிருக்கிறது. ஏற்பட்ட சேதங்களுக்குக் காரணகர்த்தாக்களாக இருப்பவர்களில் ஒருவர்தான் ‘நமஸ்காரம் தோஸ்த்தோன்’ என்று தொடங்கும் காணொளிகளில் வரும் துருவ். வடமாநில தேர்தல்...

Read More
இந்தியா

மத்தியிலிருந்து மத்திக்கு: உபி-அகிலேஷ்-ஒரு புதிய எழுச்சி

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உத்திரப் பிரதேச அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் கட்டப்பட்ட இராமர் கோயில் பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் என்ற கருத்து உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அயோத்தி நகரத்தை உள்ளடக்கிய ஃபைசாபாத்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!