Home » துருவ் ரதே: பாஜகவின் புதிய வில்லன்
இந்தியா

துருவ் ரதே: பாஜகவின் புதிய வில்லன்

துருவ் ராதே

டெல்லியைக் கைப்பற்ற உத்தரப் பிரதேசம் முதல் படி. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் அனாயாசமாக வாரிச் சுருட்டிய பா.ஜ.க., இம்முறை அடி சறுக்கியிருக்கிறது. ஏற்பட்ட சேதங்களுக்குக் காரணகர்த்தாக்களாக இருப்பவர்களில் ஒருவர்தான் ‘நமஸ்காரம் தோஸ்த்தோன்’ என்று தொடங்கும் காணொளிகளில் வரும் துருவ். வடமாநில தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்தவர் என்ற தலைப்போடு இவருடைய படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஹரியானாவில் பிறந்து, ஜெர்மனியில் படித்து, அங்கேயே வாழும் ஒரு 90களின் குழந்தைதான் துருவ் ராதே. அவர் சுற்றிப்பார்க்கும் நாடுகளைப் பற்றிய காணொளிகளை யு டியூபில் பதிவேற்றிக் கொண்டிருந்தவரை யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. 2013-ஆம் ஆண்டின் இறுதிகளில் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்து பேசத் தொடங்கிய போது தான் காட்சிகள் மாறின. தனது புள்ளி விவர – ஆதாரப்பூர்வப் பேச்சுக்களால் தற்போது, பா.ஜ.க.விற்குத் தீராத் தலைவலியாக மாறிப்போயிருக்கிறார் துருவ். இத்தனைக்கும் தொடக்கத்தில் ஊழலுக்கு எதிரான மோடியின் முழக்கங்களால் ஈர்க்கப்பட்டிருந்தார். மோடி முதல் முறை பிரதமராகப் பதவியேற்றபோது, துருவுக்கு முழுதாக இருபது வயது கூட நிறைந்திருக்கவில்லை.

டெல்லியில் ஆம் ஆத்மி அமைத்திருந்த ஊழல் புகார் கொடுக்கும் தொலைபேசி இணைப்புகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. கட்டுப்படுத்திக்கொண்டிருந்தது என்பதை அறிந்த போது தான் அதிர்ச்சியடைந்தாக சொல்லும் துருவ், அதன் பிறகு தான் இந்த அரசியல் கட்சிகளின் உண்மை முகத்தைக் காட்டும் காணொளிகளை ஒவ்வொன்றாகப் பதிவிடத் தொடங்கியதாகக் கூறுகிறார். முதலில் அக்கட்சியின் ஐ.டி. பிரிவு என்ன செய்கிறது, எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புட்டு வைத்த துருவ், மணிப்பூர் கலவரம், தேர்தல் பத்திர முறைகேடு எனத் தன் அடுத்தடுத்த காணொளிகளில் பிரதமர் மோடி சர்வாதிகாரியா? என்பது போன்ற நேரடி விவாதங்களையே சற்றும் தயங்காமல் முன்வைக்கத் தொடங்கினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • லாகின் செய்த பிறகும் முழுக் கட்டுரையைப் படிக்க முடியவில்லை.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!