1. 21ம் நூற்றாண்டின் இணையற்ற வில்லன் தேதி: 21-பிப்ரவரி-2022 (உக்ரைன் போருக்கு மூன்று நாட்கள் முன்னர்) இடம்: கிரெம்ளின் மாளிகை அவை: ரஷ்யப் பாதுகாப்பு சபை கைகளை வீசிக்கொண்டு துரித நடையுடன் நுழைகிறார், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். பளபளவென வெள்ளைத் தூண்களுடைய அந்தப் பெரிய வட்ட அறையின் இருக்கையில்...
Tag - விளாதிமிர் புதின்
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு நெருங்குகிறது. இதோ அதோ என்கிறார்களே தவிர போர் முடிவதற்கான அறிகுறியே இல்லை. ஜெயித்துவிடுவோம், ஜெயித்துவிடுவோம் என்று பிரதி உத்திராயண, தட்சிணாயன காலத் தொடக்கங்களில் விளாதிமிர் புதின் அறிவித்துக்கொண்டிருக்கிறார். உக்ரைன் அதிபரோ, ஒவ்வொரு பிரதோஷத்துக்கும்...
சோவியத் யூனியனின் சிதைவுக்குக் காரணம் என்று பெரும்பாலான ரஷ்யர்களாலும் அதிபர் புதினாலும் சுட்டுவிரல் நீட்டப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான மிக்கைல் கோர்பசேவ் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி இயற்கை எய்தினார். நிறை வாழ்வுதான். சந்தேகமில்லை. புதின் அவரது...
15. முடியாத யுத்தம் ஐரோப்பியக் கண்டத்தின் மிகப் பெரிய நாடு. இயேசுநாதர் பிறப்பதற்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதக் குடியேற்றம் நிகழ்ந்த பிராந்தியம் என்று தொல்லியல் ஆய்வுகள் சொல்கின்றன. தனிச் சிறப்பு என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை என்பதனாலேயே ஒரு தேசத்தின் எல்லைகளை ஆளுக்குக்...
13. மன்னன் எவ்வழி ரஷ்ய மக்கள். புதின் எழுதிய உக்ரைன் யுத்தத் திரைக்கதைக்கு க்ளைமேக்ஸ் எழுதும் தகுதி படைத்தவர்கள் அவர்கள்தாம் என்று பார்த்தோம். ஒருமித்த குரலில் அவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து, போருக்கு எதிராக அல்லது புதினுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினால் நூல் அல்லது வால் பிடித்து...
12. உத்திகள், திட்டங்கள் அதிபராகப் பதவி ஏற்ற பின்னர், அதிபர் மாளிகையையாவது அவர் முழுதாகச் சுற்றிப் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை. கண்ணை மூடித் திறப்பதற்குள் கோவிட்; இன்னொரு முறை மூடித் திறப்பதற்குள் யுத்தம். உண்மையில் போர் தொடங்கிய முதல் சில நாள்களில் உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஸெலன்ஸ்கிக்கு...
11. யுத்தத்தின் தோற்றுவாய் பூமி எவ்வளவு பெரியது; தேசங்கள் எங்கெல்லாம் விரிந்து பரந்திருக்கின்றன என்று சரியாகத் தெரியாத காலத்திலேயே சில மன்னர்கள் புவி மொத்தத்தையும் ஆள நினைத்தார்கள். அதற்காகப் படையெடுத்துப் பாதி வழியில் ஊர் திரும்பினார்கள் அல்லது செத்துப் போனார்கள். பின்னர் பிரிட்டன் உலகெங்கும்...
10. அணு உலை ஆக்கிரமிப்பு ரஷ்யாவின் எண்ணெய் வளத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். போரிஸ் யெல்ஸின் பதவி விலகி, விளாதிமிர் புதின் ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு இருந்த சவால்கள் சிறிதல்ல. எந்த வளமும் இல்லாததொரு தேசமென்றால் சிக்கலே இல்லை. ஏழை நாடு என்று போர்ட் மாட்டிக்கொண்டு, யாரையாவது அல்லது எல்லோரையும்...
9. எடுக்க எடுக்க எண்ணெய் நவீன உலகில், ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படையெடுப்பது என்பது கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமம். இரண்டு உலகப் போர்களையும் ஏராளமான இதர போர்களையும் கண்டு களித்துவிட்ட பிறகு சற்றே புத்தி சுவாதீனம் அடைந்த மேற்கு தேசங்கள் பிராந்தியத்துக்குப் பிராந்தியம், துறைக்குத் துறை...