2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பா.ஜ.க.வையும் அதன் சித்தாந்தங்களையும் எதிர்க்கும் கட்சிகள் INDIA கூட்டணியில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றன. பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகள் வழக்கம்போல மோடியின் ஒற்றைத் தலைமையை ஆதரித்து வருகின்றன. INDIA...
Tag - பிரதமர் மோடி
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் பேரன் ராகுல் காந்தியின் வயது 14. அடுத்த ஆறு ஆண்டுகளில் ராஜிவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார். இருபது வயது இளைஞன் ராகுலுக்கு இருந்தது இரண்டு வாய்ப்புகள். தன் அன்புக்குரிய பாட்டியையும் தந்தையும் இழக்கக் காரணமான, தனக்கும் தன் தாய்க்கும் விருப்பமில்லாத...
பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 36 கட்சிகள் இருக்கின்றன. தோராயமாக என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளுங்கள். சிலர் வருவதும் போவதுமாக இருப்பதால் எண்ணிக்கை கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். 36 என்ற எண்ணைப் பார்த்ததும் இது ஒரு பிரம்மாண்ட வெற்றிக் கூட்டணி என்று தோன்றினால் அது தவறு. 36...
மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பிரதமரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் தொடங்கியிருக்கிறது. பதில் சொல்ல வேண்டிய பிரதமர் இதனைத் தவிர்த்திருக்கிறார். அமித்ஷா பதில் சொல்வார். வேறு பலர் சொல்வார்கள். யாரோ எதையோ...
பொது சிவில் சட்டம் (Common Civil Code). பிரதமர் மோடி கடந்த ஜூன் 27-ஆம் தேதி போபாலில் இதைப் பற்றிப் பேசிய பிறகு பலரும் எதிர்த்தோ ஆதரித்தோ பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பல வருடங்களாகப் பேசப்பட்டு வரும் இந்த பொது சிவில் சட்ட விவகாரம் பாரதிய ஜனதாவின் 2019-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அடுத்த...
இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனின் சந்திப்பு பல எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே ஒருவாறாக நடந்து முடிந்தது. அமெரிக்காவிற்கு, அமெரிக்க அதிபர்களுடைய அழைப்பை ஏற்றுப் பல பாரதப் பிரதமர்கள் இதற்குமுன் வந்து காங்கிரசில் பேசிவிட்டு, வெள்ளை மாளிகையில் விருந்துண்டு சென்றிருக்கிறார்கள். அதிபர்...
ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி வைத்துவிட்டு இந்த செங்கோல் அரசியலைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பது நல்லது. மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு முகம் இருந்து வருகிறது...
இந்த மே மாதம் 24 மற்றும் 25’ஆம் நாட்கள் அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வரும் அவரது அமைச்சரவை, அதிகாரிகள் குழுவினர் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வந்திருந்தார்கள். நோக்கம் முதலீட்டாளர்களை ஈர்ப்பது. முதல்வரின் பயணத்திட்டம் சிங்கப்பூருக்கானது மட்டுமல்ல, ஒன்பது நாட்களுக்கு, சிங்கப்பூர் மற்றும்...
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு என்பது வலுவானதாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில் இதன் லாபங்களைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. மிக எளிய, மிகச் சமீபத்திய...
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டில் வைத்த சிப்ஸ் நமுத்துப் போனதால் திரும்பப் பெறப்படவில்லை என்றும் சேர்த்தே அறிவித்திருக்கலாம் ரிசர்வ் வங்கி. பொதுமக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுப்பதை நிறுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன...