Home » உலகம் » Page 38

Tag - உலகம்

உலகம்

ஊருக்கும் வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை!

தேன்கூட்டைக் கலைத்தாற்போல முன்னாள் அதிபர் டிரம்ப்பின் மீது பல வழக்குகள் பதிவாகும் என்பது தெரிந்தாலும், அவர் சட்டப்படி ஆதாரப்பூர்வமாகக் குற்றம் (indicted) சாட்டப்படுவார் என்பதை அவ்வளவு நிச்சயமாக யாரும் அறிந்திருக்கவில்லை. அதிபர் ஒபாமா பதவிக்காலத்தில் இருந்த நெறிமுறைகள் துறைக்கு ஓய்வு கொடுத்து...

Read More
ஆளுமை

தாமஸ் கிஸிம்பா: மறக்கக் கூடாத மனிதர்

நாஜி ஜெர்மனியர்களால் யூதர்கள் துரத்தித் துரத்தி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட போது போலந்தில் இருந்த தன் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான யூதர்களைக் காத்தருளிய ஒஸ்கார் சிண்ட்லர் போல, ருவாண்டாவில் நடந்த இனப் படுகொலைகளின் போது நானூறுக்கும் மேற்பட்ட டுட்ஸி இனச் சிறுவர்களுக்குத் தன் அநாதை இல்லத்தில் அடைக்கலம்...

Read More
உலகம்

சிக்கல் சிங்காரவேலர்களின் கதை

பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே எழுதியிருந்தோம். சங்கதி இன்றைக்கு சந்திக்கு வந்திருக்கிறது. ரகசிய ஆலோசனை என்று முத்திரையிடப்பட்டாலும் இதில் ஒரு புண்ணாக்கு ரகசியமும் இல்லை. மே பன்னிரண்டாம்...

Read More
உலகம்

மெக்ஸிகோ: தோண்டத் தோண்டக் குற்றம்

மெக்ஸிகோ என்பது ஒரு புதையல் பூமி. புதையல் என்றால் தங்கப் புதையல், பணக்கட்டுப் புதையல் அல்ல. தோண்டத்தோண் மனித உடல்கள் கிடைக்கும் பயங்கரப் பிராந்தியம். மிகையல்ல. பல காலமாகவே கொன்று புதைக்கப்பட்ட குற்றங்களின் பேட்டைப் பட்டியலில் மெக்ஸிகோவுக்கு முதல் வரிசை இடம் உண்டு. குவடலஹாரா நகரின் புறநகர்ப்...

Read More
உலகம்

சீனா-யூனான்-உய்குர்: இடி, அடி, உடை!

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் அழகிய ‘நாகு’ நகரத்திற்கு இது போதாத காலம். பருத்த குவிமாடத்துடனும் (Dome) , நான்கு மினாராக்களுடனும் (Minaret) புத்தம்புதுப் பொலிவுடன் நகருக்கே அடையாளமாய்த் திகழும் ‘நாஜியாங்’ பள்ளிவாசலைக் காக்க நகரவாசிகள் திரண்டிருக்க, அவர்களுடன் ஐயாயிரம் சீன ராணுவ வீரர்கள்...

Read More
உலகம்

தள்ளாதே!

கலவரமூட்டும் சப்வே களேபரங்கள் மே 22 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு தன் பணியாளரின் செல்போனில் இருந்து வந்த அழைப்பை ஏற்றுப் பேசினார், மேத்தொ எக்ஸ்ப்ரஸ் கஃபே உரிமையாளர். பேசியது யாரோ ஒரு பெண், இங்கே சப்வேயில் ஒரு விபத்து, உங்கள் பணியாளர் ஆக்ஸோஸ் காயமடைந்துவிட்டார் என்றதும், பின்னால் என் அதிகாரி எலி நெய்மை...

Read More
உலகம்

ஒரு போரும் பல ஒத்திகைகளும்

37 வயது பாவெல் – கட்டுப்போட்ட ஒரு கை கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு கை இயந்திர துப்பாக்கியைப் பிடித்து ரஷ்ய வீரர்களைச் சுட்டுக் தள்ளிக் கொண்டிருக்கிறது. நான்கு பேர் கொண்ட உக்ரைனின் 206வது படைப்பிரிவில் மீதமிருப்பது பாவெல் மட்டுமே. குண்டடிபட்ட தனது குழுவினர் தப்பிக்க...

Read More
உலகம்

முதுராஜா: ஒரு யானை படும் பாடு

இரண்டு தசாப்தங்களின்  பின் தனது தாய் நாட்டுக்குத் திரும்புகிறது ‘முது’ என்கிற முது ராஜா. பயணச் செலவு ஏழு இலட்சம் யு.எஸ். டாலர்ஸ்! பளபளக்கும் நீண்ட தந்தங்களையுடைய முழு வளர்ச்சியடைந்த யானையொன்றை,  நாடு விட்டு நாடு தூக்குவதென்பது எளிதான காரியமல்ல. அதுவும் நோய்வாய்ப்பட்டு, கொஞ்சம்...

Read More
உலகம்

மீண்டும் மதவாதம்: இனி மீளுமா இலங்கை?

கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நாட்டைவிட்டு ஓடிய போது அநாதையாகிப் போனது ராஜபக்சே குடும்பத் தொழிற்சாலை. பதினைந்து வருடங்களாக இத்தொழிற்சாலையை இயக்கப் பயன்படுத்தப்பட்ட இனவாதத்...

Read More
உலகம்

திருப்பி அடிக்கும் வழி

கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து நிமிடத்தில் கல்வெட்டு வெறுங்கல்லானது. அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தார்கள். இரண்டாம் உலகப் போரில் சோவியத்தின் வெற்றியைப் பறைசாற்றும் நினைவுச்சின்னம் அது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!