Home » ஒரு போரும் பல ஒத்திகைகளும்
உலகம்

ஒரு போரும் பல ஒத்திகைகளும்

37 வயது பாவெல் – கட்டுப்போட்ட ஒரு கை கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு கை இயந்திர துப்பாக்கியைப் பிடித்து ரஷ்ய வீரர்களைச் சுட்டுக் தள்ளிக் கொண்டிருக்கிறது. நான்கு பேர் கொண்ட உக்ரைனின் 206வது படைப்பிரிவில் மீதமிருப்பது பாவெல் மட்டுமே. குண்டடிபட்ட தனது குழுவினர் தப்பிக்க, இதுதான் ஒரே வழி. மீட்புக்குழு வரும்வரை ரஷ்யர்கள் நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தன்னந்தனியாக சரமாரியாகச் சுடுகிறார். பாய்ந்த குண்டுகளை தடுக்கக்கூட இல்லை எதிரில் வருபவர்கள். முன்னேறி நெருங்கி வந்தார்கள்.

கிழக்கு பாக்மூத்தின் கண்காணிப்புக் குழு இது. ரஷ்ய பீரங்கிகளின் துல்லியத் தாக்குதலால் கென், சிகன் இரு வீரர்கள் முதலில் காயமடைந்தார்கள். மரத்தாலான பதுங்கு குழிக்குள் போகுமாறு உத்தரவிடுகிறார் பாவெல். இவர்களுடன் இருந்த போர் மருத்துவரும் குழிக்குள் விரைகிறார். முதலுதவி முடித்தபின் சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேறுவதே திட்டம். நொடிகளில் அந்தக் குழியும் தாக்கப்படுகிறது. சிகன் மரக்கட்டைகளுக்கு நடுவே தூக்கி வீசப்படுகிறார். நொறுங்கிப் போயிருக்கும் அவர் காதுகளில், தூரத்தில் ஏதோ சத்தம் கேட்கிறது. பாவெல் தான் 100மீ தொலைவிலிருந்து இவர்களின் நிலைகுறித்து விசாரிக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!