Home » உலகம் » Page 23

Tag - உலகம்

உலகம்

என்ன ஆச்சு ஜப்பானுக்கு?

பிப்ரவரி பதினைந்தாம் தேதி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான் Recession எனப்படும் பொருளாதார மந்தநிலையில் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. கூடவே, அது நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்ட செய்தியும். ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி அளவைக் குறிக்கும் ஜி.டி.பி. தொடர்ந்து இரண்டு நிதிக் காலாண்டுகளாகச்...

Read More
உலகம்

அலெக்ஸி நவல்னி: ஒரு மரணமும் சந்தேகத்துக்கு இடமில்லாத ஒரு சந்தேகமும்

“முயற்சியைக் கைவிடாதீர்கள். நல்லவர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதே, தீமை வெல்வதற்குப் போதுமானதாகிறது. அதனால்தான் சொல்கிறேன், செயல்படாமல் இருந்து விடாதீர்கள். என்னைக் கொல்ல முடிவு செய்கிறார்கள் என்றால், நாம் அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவர்கள் என்று பொருள். தவறு செய்பவர்களால் ஒடுக்கப்படும்...

Read More
உலகம்

பாலஸ்தீன மேற்குக் கரையும் பாவப்பட்ட தலைமுறையும்

ஹமாஸ் ‘உடனடியாக’ கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டு 1948 நக்பாவுக்குச் சற்றும் குறைவில்லாத இன்னொரு பேரழிவு நிகழ்வதைத் தடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் மஹ்முத் அப்பாஸ். ஹமாஸ் எப்போதுமே அப்பாஸ் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. பெரும்பான்மை பாலஸ்தீனியர்கள் அப்பாஸ் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகப்...

Read More
உலகம்

விதைத்தது போதும், வீறு கொண்டெழு!

விளைநிலத்தை உழும் டிராக்டர்கள், ஐரோப்பாவின் முக்கிய நெடுஞ்சாலைகளை நிறைத்திருக்கிறது. மண்ணைத் தளர்த்தி, விதையிடத் தயாரிப்பதே உழுதல். சட்டங்களைத் தளர்த்த, ஆட்சியாளர்களைத் தயாரிக்கவே நிறுத்தப்பட்டுள்ளன இந்த டிராக்டர்கள். விவசாயம், விவசாய இனம், இரண்டும் நீடித்திருக்கவே ஐரோப்பிய விவசாயிகள்...

Read More
உலகம்

சட்டவிரோதக் குடியேற்றம்: தத்தளிக்கும் அமெரிக்கா

பாதுகாப்புத் தேடி பக்கத்து ஊரிலிருந்து தப்பி ஓடி அடைக்கலம் தேடி இரண்டு பேர் தற்காலிகமாகத் தங்க வந்தால், பாவமாக இருக்கிறது என அனுமதி கொடுப்பீர்கள். அதுவே இருநூறு பேர் வந்தால்? இரண்டாயிரம்?  ஒரே ஓர் இரவென்றாலும் முடியாதுதானே? அப்படியான ஒரு நிலைதான், கனவுகள் மின்னும் தேசமான அமெரிக்காவிற்கும் இப்போது...

Read More
உலகம்

மன்னருக்குப் புற்று

பிரிட்டனின் மன்னராகி ஒன்றரை ஆண்டுகளே ஆகிறது. அதற்குள் மன்னர் சார்லசிற்கு உடல்நிலை காரணமாகப் பொதுக் கடமைகளிலிருந்து சில காலம் ஓய்வெடுக்கும் நிலைமை வந்து விட்டது. எழுபத்தைந்து வயதான ராஜா அண்மையில் புரஸ்டேட் சம்பந்தமான ஒரு சிகிச்சைக்குள்ளானார். அதன் பின்னர் அவருக்கு ஒரு வகையான புற்று நோய் இருப்பது...

Read More
உலகம்

பாகிஸ்தானில் ஒரு பொம்மலாட்டத் திருவிழா

ஒரு தேர்தல் எப்படி நடக்கக் கூடாதோ, கன கச்சிதமாக அப்படியே பாகிஸ்தானில் நடந்து முடிந்தது. பிப்ரவரி 8 அன்று தேர்தல். அதற்கு முதல் நாள் இரண்டு இடங்களில் கலவரம். சுமார ஐம்பது பேர் உயிரிழந்தார்கள். எனவே நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. லட்சக் கணக்கான இராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில்...

Read More
உலகம்

இம்ரான் கானுக்கொரு யார்க்கர்

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்குப் போதாத காலம் எப்போதோ ஆரம்பமாகிவிட்டது. இப்போது நடப்பது, போதவே போதாத காலம். கட்டக்கடைசியாக அவர் செய்துகொண்ட மூன்றாவது திருமணம் இப்போது அவர் கழுத்தைப் பிடிக்கிறது. இஸ்லாமிய விதிமுறைகளை மீறி நடந்த திருமணம் என்பது குற்றச்சாட்டு. அதுசரி. ஒழித்துக்கட்டிவிடுவது என்று முடிவு...

Read More
உலகம்

இலங்கை அரசியல்: ஜேவிபிக்கு ஜாக்பாட்?

தேர்தல் திணைக்களம் ஜனாதிபதி ரணிலுக்கு ஞாபகப்படுத்திவிட்டது. ஆம். இது இலங்கைக்குத் தேர்தல் ஆண்டு.அரசியல் சாசனப்படி நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்தல் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 17ம் தேதிக்கும், அக்டோபர் 17ம் தேதிக்குமிடையில் நடத்தியே ஆகவேண்டும். இலங்கைக்கு என்று ஒரு...

Read More
உலகம்

எளிதில் கிடைக்கும் எமன்

பெரிய புயல் காற்று, சோலையைக் கடக்கும் போது எண்ணற்ற இளம் செடிகள் சீற்றம் தாளாது கீழே விழுவதைப் புயல் அறியாது. அதே போலச் சமூக மாற்றங்கள் நிகழும்போது பக்க விளைவுகளாகப் பல விபரீதங்களும் நிகழும். காலப்போக்கில் அரசியல் சட்டங்களும் சுமூக விதிகளும் தீயன குறைத்து நல்லதை அதிகரித்து மாற்றங்களை நிலைக்கச்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!