Home » ரணில் வந்ததால் லாபம் உண்டா?
இலங்கை நிலவரம் உலகம்

ரணில் வந்ததால் லாபம் உண்டா?

பதவி ஏற்கிறார் ரணில்

மே 9ம் தேதி அந்தக் கலவரம் நடந்தது. அதுவரை அரசுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த மக்கள் அமைதி வழியில்தான் தமது எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அன்றைக்கு அது கலவரமாக உருமாறியது. தேசமே பற்றி எரிந்து, இறுதியில பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அப்போதிலிருந்து ஜனாதிபதி கோட்டாபயவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பெரும் பெரும் ராணுவ டாங்கிகளையும் ட்ரக்குகளையும் தலை நகர் முழுக்க பவனி வர வைத்தார். உக்ரைன் யுத்தக் களத்தைப் பார்ப்பது போல இருந்தன அக்காட்சிகள்.

அடுத்த நான்கு நாள்களுக்கு இது தொடர்ந்தது. ராணுவத்தின் துணையுடன் அதிகாரத்தைத் தொடரப் போகிறாரோ என்ற குழப்பம் நிலவியது. கடைசியில் என்ன நினைத்தாரோ, ரணிலை வரவழைத்தார். இத்தனைக்கும் அவரது கட்சியில் இருந்து தேர்வான ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர், ஆயுள் கால தலைவர் அவர் மட்டுமே. அவருடன் என்ன பேச்சு என்று பரபரப்பானது அரசியல் களம். கடைசியில் அது நடந்தது.

ஆறாவது முறையாகப் பிரதமராகி இருக்கிறார் ரணில். இலங்கையில் அதிக முறை பிரதமரான சாதனை அவருடையதுதான். என்ன ஒன்று, இம்முறை பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள் இல்லை. பதவியேற்புத் தோரணங்கள் இல்லை. பட்டாசு வெடித்துக் கொண்டாட்டங்கள் இல்லை. ஆதரவாளர்களின் ‘வாழ்க’ கோஷங்கள் இல்லை. ஜெர்மனி வீழ்ந்து போய் ஹிட்லருக்குக் கல்யாணம் நடந்த கலவரப் பொழுதுகளில் ஜோசஃப் கெப்பல்ஸும், திருமணப் பதிவாளரும் மட்டுமே இருந்தது போல ஜனாதிபதி கோட்டாபயவும் அவரது செயலாளரும் மட்டுமே ரணிலுடன் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.

அத்தியவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு, அதி உயர் பண வீக்கம், பெரு மூச்சுக்கு மேல் பெருமூச்சு விட வைக்கும் விலைவாசி உயர்வு என்று திணறிக் கொண்டிருந்த மக்களின் ஆத்திரம், ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பத்திற்கும் எதிராக வளர்ந்து நின்றது. ரணில் மட்டும் அன்று பிரதமர் பதவியை ஏற்றிருக்காவிட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வேறு போக்கிடமின்றி ராஜினாமா செய்து இருப்பார். ஆனால் ரணில் விக்ரமசிங்கே துணிவு கொண்டு இந்தப் பொறுப்பேற்றதன் பின்னணியில் வெறும் தேச நலன் மட்டுமில்லை. சில அரசியல் கணக்குகள் இருக்கின்றன. பல பழிகள் தீர்க்கப்பட இருக்கின்றன. ‘டீல்’ இன்றி அரசியல் ஏது?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!