Home » அழிவின் ஆரம்பப் புள்ளி
இலங்கை நிலவரம் உலகம்

அழிவின் ஆரம்பப் புள்ளி

கட்டாய இயற்கை விவசாயத்தில் மக்கள்..

இலங்கை திவால் நிலைக்குச் சென்றதற்கு முக்கியக் காரணம், அரசின் தவறான விவசாயக் கொள்கையும் அது சார்ந்த திடீர் சட்டங்களும்தான். அதன் விளைவு தற்போது ஒட்டுமொத்த விவசாயத்தையும் கைவிட்டு விடும் நிலைமைக்குச் சென்றுள்ளனர் இலங்கை விவசாயிகள். விவசாயம் போனால் நாட்டின் கதி என்ன ஆகும்?

‘சுபீட்சத்தின் நோக்கு’என்று தனது விவசாயக் கொள்கைக்குப் பெயரிட்டார் ராஜபக்ச. 2021 மே மாதம் 9ம் திகதி அது சட்டமாக அறிவிக்கப்பட்டது. ‘ஆரோக்கியமான உற்பத்தித் திறன் கொண்ட குடிமகனை உருவாக்குவது. அதற்கு நச்சு அல்லாத உணவுக்கான மக்களின் உரிமையை அரசாங்கம் உத்தரவாதம் செய்வது’ என்பதுதான் அதற்கு முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம். அன்றோடு இரசாயன உரங்களைத் தடை செய்தது அரசு.

சட்டத்தை ஜூன் முதல் தேதி அன்று அரசு சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர்களை அழைத்து பகிரங்கமாகவே அறிவித்தார் அதிபர். ‘விவசாயிகளோ, மற்றவர்களோ யார் எதிர்த்தாலும் என் முடிவு இதுதான். எனது அரசாங்கத்தில் விவசாயிகளுக்கு நிறைய செய்துள்ளேன். எனவே உங்களில் யாருக்கும் எனக்கெதிராகப் பிரசாரம் செய்ய உரிமை இல்லை’ என்று நேரடி அச்சுறுத்தலையும் செய்தார். கூடவே ‘இரசாயன உரங்களைத் தடை செய்தல்’ என்ற சட்ட வன்முறைக்குப் பின்னால் அதற்கான நியாயப்படுத்துதலும் நடந்தது.

பதினைந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பரப்புகளில் இலங்கையில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பயிர் நிலங்களுக்கான தொண்ணூற்று ஐந்து சதவீதம் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு 259 மில்லியன் டாலர் பணம் அரசுக்குத் தேவையாக இருக்கிறது. இரசாயன உரங்களின் பயன்பாட்டினால் சிறுநீரக நோயாளிகளும், புற்றுநோயாளிகளும் அதிகரித்துள்ளனர். உரங்களின் இறக்குமதி இப்படியே தொடர்ந்தால் அந்நியச் செலவாணி இன்னமும் 300, 400 மில்லியன் டாலர் வரை அதிகரிக்கலாம் என்பதே அரசுத் தரப்பினரின் அப்போதைய வாதங்களாக இருந்தன.

உண்மை என்னவென்றால்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!