தொண்ணூற்று மூன்று சதவீத எழுத்தறிவு, எழுபத்தாறு ஆண்டுகள் என்ற சராசரி ஆயுள் காலம், மனித அபிவிருத்திச் சுட்டெண் என்றழைக்கப்படும் ‘Human Development index’ இல் ஆசியாவில் முதலாவது இடம், சுற்றிவரக் கடல் வளம்,எதை விதைத்தாலும் பிழைத்துக் கொள்ளுமளவுக்கு விதவிதமான சீதோஷ்ண நிலையுடன் கூடிய ஒன்பது மாகாணங்கள், ‘பட்டினியை என்றைக்கும் இலங்கை மக்கள் அனுபவிக்கமாட்டார்கள்’ என்று பிரித்தானிய ஆளுனர்கள் அந்நாளில் கூறிய ஆரூடங்கள் என்று பெருமையும் பவித்ரமுமாய் இருந்த தேசத்தின் தலைவிதி, தெருப் பைத்தியத்தின் கைகளில் கிடைத்த ஐபோன் 14 மாதிரி ஆகிப் போனதன் பின்னணியை ‘டாக்குமெண்டரி’ என்றும் ‘டெவலப்பிங் ஸ்டோரி’ என்றும் தலையங்கங்கள் இட்டு விதவிதமாக விவரித்துக் கொண்டிருக்கின்றன உலக மீடியாக்கள்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment