ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவது என்றால் தெரியும்தானே? கிட்டத்திட்ட அப்படியான ஒரு வேலையைத்தான் இவர்கள் செய்கிறார்கள். யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கும் அலையை ஓயாமல் ஆற்றித் திரும்பக் கடலுக்கே அனுப்புவார்கள். அது சீறும் அலைகளானாலும் சரி சாந்தப்படுத்தி கடலுக்கே மீண்டும் அனுப்புவது தான் இவர்களின் முக்கியத் தொழில். யார் இவர்கள்? இவர்கள் செய்யும் தொழிலால் இவர்களை அலையாத்திக் காடுகள் என்போம். சுனாமி நேரத்தில் மட்டும் பேசப்படுவதல்ல இவர்கள் தொழில். சூரியனைப்போல் சந்திரனைப் போல் உயிர் உள்ளவரை இங்கே நிலையாகத் தொழில் புரிபவர்கள் இவர்கள். சுனாமிக்கு முன்பும் சரி பின்பும் சரி வழமையாகத்தான் இவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். நாம் தான் இவர்களை தேவைப்பட்டால் மட்டுமே தேடுகிறோம். பேசுகிறோம். இக்கட்டுரை மூலம் முழுமையாக அறிந்துகொண்டு நினைவின் ஒரு மூலையில் வைப்போம் அலையாத்திக் காடுகளை.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
சந்திரனில் தரையிறங்கிய முதல் இந்திய செயற்கைக்கோள் சந்திரயான்-1. இந்தப் பயணத்திற்குப் பின்னணியில் செயல்பட்ட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே...
துப்பறிவாளனை விட்டு விட்டீர்களே கிளைமாக்ஸே அங்கு தான். நல்ல விரிவான கட்டுரை.