Home » ஒரு  குடும்பக்  கதை – 69
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 69

69. மீண்டும் காங்கிரஸ் தலைமை

கவலையுடன் நேருவும், இந்திராவும் லண்டனிலிருந்து திரும்பியபோது, கமலா நேருவின் உடல்நிலையில்  சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இந்திரா தன்னுடைய பள்ளிக்குப் புறப்பட்டார்.

அம்மாவின் உடல்நிலை, கடினமான இலக்கணத்துடன் கூடிய ஜெர்மன் மொழிப் படிப்பு, கடுப்படிக்கும் ஜெர்மன் ஆசிரியர்கள், வகுப்பில் மற்ற எல்லா மாணவர்களுக்கும் அக்கா போன்ற வயசு மற்றும் தோற்றம், சக மாணவ, மாணவிகளின் கேலி இவையெல்லாம் இந்திராவுக்குப் பள்ளிக் கூடத்தில் பெரிய தலைவலிகளாக இருந்தன. பாட்டு, டான்ஸ் வகுப்புகளிலும் அவருக்குத் துளியும் ஆர்வம் இல்லை.

பிடிப்பே இல்லாமல் இயந்திரத்தனமாக  பள்ளிக்கூடம் சென்று வந்து கொண்டிருந்தார். டிசம்பர் மாதத்தில் பனிபொழியத் துவங்கியது.  பள்ளிக்கூடத்தின் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆசிரியை பனிச்சறுக்கு வகுப்புகளைத் துவக்கினார். இந்திராவுக்கு அதுவோர் புது அனுபவமாக இருந்தது. அவர் முகத்தில் சந்தோஷம் படர்ந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!