Home » ஒரு குடும்பக் கதை – 72
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 72

இந்திரா காந்தி- மகாத்மா

72. சிறையில் இந்திரா

போராட்டத்தில் போலீசின் தடியடிக்குள்ளானவர்கள் பலமான அடியென்றால் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். லேசான பாதிப்பு என்றால் ஆனந்த பவனுக்கு அழைத்துவரப்பட்டு, அங்கே முதலுதவி அளிக்கப்பட்டது. இந்திரா ஒரு நர்ஸ் போலப் பலருக்கும் சேவை புரிந்தார். இந்திரா படித்து வந்த ஜீசஸ் அண்டு மேரி கான்வென்ட்டின் கன்னியாஸ்திரீகள், நேரு குடும்பத்தின் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சானம் செய்தார்கள். சக மாணவிகள் இந்திராவை விட்டு விலகி இருக்கும்படி அறிவுறுத்தினார்கள்.

“நீங்கள் இப்படியெல்லாம் நடந்துகொண்டால், வரும் விடுமுறைக்குப் பின் நான் உங்கள் பள்ளிக்கூடம் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டேன்!” என்று தைரியமாக அவர்களுக்குப் பதிலடி கொடுத்தார் இந்திரா.

பள்ளிக்கூடத்துச் சம்பவங்களை நேருவிடம் சொல்லி, “இனி நான் அந்தப் பள்ளிக்குச் சென்று படிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார். நேரு அதற்கு மறுப்பேதும் சொல்லாமல், இந்திரா வீட்டிலேயே தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் மூலம் படிப்பைத் தொடர ஏற்பாடு செய்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!