அந்தத் தெருவின் பெயர் லெட்ரா ஸ்ட்ரீட். அங்கே சாலையின் நடுவே ஒரு எல்லைச் சாவடி. அதனை அண்மிக்கும் போது ஒரு அறிவிப்புப் பலகை. அதில் “போலிப் பொருட்களைக் எமது நாட்டுக்குள் கொண்டு வருவது குற்றச் செயலாகும்” எனும் அர்த்தத்தில் ஆங்கில வார்த்தைகளைக் கொண்டிருந்தது. “எல்லைக்கப்புறம் போலிப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் இருக்கிறது. முட்டாள்தனமாக எதையாவது வாங்கிக் கொண்டு வந்து எங்களிடம் அகப்பட்டால் உங்களுக்கு கஷ்டகாலம் இருக்கிறது” எனும் மறைமுகமான எச்சரிக்கை என்றே இந்த அறிவிப்புப் பலகையின் வார்த்தைகளுக்கு நான் அர்த்தம் எடுத்துக் கொண்டேன்.
இதைப் படித்தீர்களா?
வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு...
பாரிமுனையில் ஒவ்வொரு தெருவும் ஒரு குறிப்பிட்ட பொருள் விற்கும் மையமாக இருக்கிறது. ஆனால் மிண்ட் தெரு அப்படி அல்ல. இந்தத் தெருவில் இன்ன பொருள்தான்...
Add Comment