Home » நாடு தழுவிய மோசடி
நம் குரல்

நாடு தழுவிய மோசடி

நீட் தேர்வில் கேள்வித் தாள் வெளியாகும் குற்றச்சாட்டு புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தவறு நடப்பதைத் தடுக்கப் புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டிய தேர்வு அமைப்பு, புதுப் புது தவறுகளை இழைத்து தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

என்.டி.ஏ. என்கிற தன்னாட்சி பெற்ற அமைப்பு நடத்திய நீட் தேர்வு முடிவுகள் இம்முறை நடைமுறைச் சாத்தியமே இல்லாத பல விஷயங்களைக் கொண்டிருக்கிறன. தேர்வு விண்ணப்பங்களுக்காக இணையதளம் திறக்கப்பட்டதில் இருந்தே குளறுபடிகள் ஆரம்பிக்கின்றன. விண்ணப்பிக்கும் இணையதளத்தை பல முறை திறந்து மூடிக்கொண்டிருந்தனர். அப்போதே குஜராத், ஒடிசா, பிகார் மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் வந்தன.

அறுபத்து ஏழு மாணவர்கள் முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தனர். அதில் சிலர் 719, 718 மதிப்பெண்கள் எடுத்திருந்ததைப் பார்த்து ஆச்சர்யம் இன்னும் அதிகமானது. சரியான பதிலுக்கு நான்கு மதிப்பெண்கள் கூடும். தவறென்றால் ஒரு மதிப்பெண் கழியும். எப்படிக் கூட்டினாலும் இந்த மதிப்பெண் வராது. முதலிடம் பிடித்தோரில் ஐம்பது பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஐம்பதில் 47 பேருக்கு கேள்வித்தாளில் முரண்பாடு இருந்தது எனவும் ஆறு பேருக்கு கால தாமதத்தால் கருணை மதிப்பெண் எனவும் விளக்கினார்கள். முந்தைய ஆண்டுகளில் கருணை மதிப்பெண் வழங்கும் வழக்கம் இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • S.Anuratha Ratha says:

    மிகவும் கவலைக்குரிய விஷயம்.மிக தெளிவான விளக்கம் எளிமையாக புரிந்து கொள்ள ஏதுவாக இருந்தது.இதை படிக்கும் போது ஒட்டு மொத்தமாக ஏனைய தேர்வுகள் குறித்தும் மனம் நம்பிக்கை இழக்கிறது.
    எத்தனையோ மாணவர்களின் உழைப்பை வீணடிப்பது அநியாயம்.

  • Vaithianathan Srinivasan says:

    ஜெய் ஶ்ரீ ராம் என்பது மட்டுமே ஒரே பதிலாக இருக்கும்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!