Home » கூடித் தொழில் செய்!
நம் குரல்

கூடித் தொழில் செய்!

கூட்டணி அமைச்சரவை என்பது ஜனநாயகத்துக்குப் புதிதல்ல. ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் இயல்புக்கு அது அவ்வளவாக ஒத்துவரக் கூடியதல்ல. பிரதமரே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கண்ணசைப்புக்குக் கட்டுப்படக் கூடியவராக இருந்தால் மட்டும்தான் அங்கே இருக்க முடியும் என்கிற சூழ்நிலையில், கட்சியோ ஆட்சியோ, கேள்வி கேட்காமல் தலைமைக்குக் கட்டுப்படுவது ஓர் அமைப்பு சார்ந்த ஒழுக்கமாக நிறுவப்பட்டுவிட்ட இடம் அது.

அந்த மரபில் பயின்று வந்தவரான பிரதமர், இந்திய அரசியலின் ஆகச் சிறந்த சந்தர்ப்பவாதிகள் சிலரைக் கூட்டணியில் உள்ளடக்கி நிறுவியிருக்கும் இந்தப் புதிய அரசு அவ்வளவு நேர்த்தியாகப் பணியாற்றும் வாய்ப்பு சொற்பமே.

அமைச்சர் பதவி இட ஒதுக்கீட்டு நிலையிலேயே சிவசேனா தனது அதிருப்தியைத் தெரிவித்து ஆட்டத்தைத் தொடங்கி வைத்துவிட்டது. நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி ஏழு இடங்களை வென்று, பாரதிய ஜனதா ஆட்சியமைக்கத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது. தெலுகு தேசம், ஐக்கிய ஜனதா தளத்துக்கு அடுத்த நிலையில் உள்ள அதிக எண்ணிக்கை இது. பதிலுக்குப் பிரதமர் தமது அமைச்சரவையில் அவர்களுக்கு ஓர் இணையமைச்சர் பதவியை அளித்தார். கேபினட் அந்தஸ்து இல்லாதது அவர்களுடைய அதிருப்திக்குக் காரணம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • அளவற்ற அதிகாரமும் பணபலமும் ஒரே இடத்தில் குவிவது நல்லதல்ல.ஆகவே கூட்டணி கட்சியின் தயவு தேவையும் கூட நல்லது தான்.
    நிர்மலா சீதா ராமன் தமிழிசை இவர்களை கட்சி சாதிய காரணங்காட்டி வகைப்படுத்துவது என்பது எனக்கு புதிய செய்தியாக இருக்கிறது.ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!