Home » பால்தசாரின் அற்புதப் பிற்பகல் நேரம்
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

பால்தசாரின் அற்புதப் பிற்பகல் நேரம்

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்
தமிழில்: மணிக்கண்ணன்


கூண்டு வேலை முடிவடைந்துவிட்டது. பழக்கத்தின் காரணமாய் அதனை பால்தசார் தாழ்வாரத்தில் தொங்கவிட்டான் – அவன் தனது பகல் உணவை முடித்துக்கொண்டபோதே எல்லோரும் அதனை உலகிலேயே மிக அழகான கூண்டு என சொல்லிக்கொண்டிருந்தனர் – நிறையபேர் கூண்டைப் பார்க்க வந்ததால் வீட்டின் முன் ஒரு கூட்டமே கூடியிருந்தது. இதனால் பால்தசார் கூண்டினை எடுத்துவிட்டு கடையை அடைக்க வேண்டியதாயிற்று.

”நீங்கள் முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும். ஒரு கோமாளியைப் போல் தோற்றமளிக்கிறீர்கள்” என்றாள் அவனது மனைவி உர்சுலா.

”மதிய உணவுக்குப்பின் சவரம் செய்வது நல்லதல்ல” என்றான் பால்தசார்.

ஒரு கோவேறு கழுதையின் பிடரியைப் போன்று குட்டையானதும், கடினமாதுமான இருவாரத்து வளர்ச்சியுடன் ரோமத்தையும், பயந்துபோனதொரு சிறுவனின் பாவத்தையும் அவன் கொண்டிருந்தான். ஆனால் அது ஒரு போலியான தோற்றம்தான். பிப்ரவரியில் அவனுக்கு முப்பது வயதாகியிருந்தது. திருமணம் செய்துகொள்ளாமலும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாமலும் உர்சுலாவுடன் அவன் நான்கு ஆண்டு காலமாய் வாழ்ந்து கொண்டிருந்தான். உஷாராக இருப்பதற்கு வாழ்க்கை அவனுக்கு பல காரணங்களை அளித்திருந்தது. ஆனால் அதில் ஒன்றும் பயப்படும்படியானதாய் இல்லை. சற்றுமுன் அவன் செய்த கூண்டு சிலருக்கு உலகிலேயே மிக அழகானதாய் தோன்றியதுகூட அவனுக்குத் தெரியாது. சிறுவயதிலிருந்தே கூண்டுகளை செய்து பழக்கப்பட்டிருந்த அவனுக்கு அதுவும் மற்ற கூண்டுகளைப்போலவே செய்வது சிறிதும் கடினமாயிருக்கவில்லை.

“சரி. சிறிதுநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். இந்த தாடியுடன் வெளியில் எங்கும் முகத்தைக் காட்டமுடியாது,”என்றாள் உர்சுலா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!