Home » ஆபீஸ் – 55
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 55

55 புகை

ஈரோடுக்கு வந்து ஊரோடு ஒத்து ஆற்றோடு போகத்தொடங்கியபின், காலையில் எழுந்தால் மாமி மெஸ் இட்லி சட்னி சாம்பார், பேப்பர் ரோஸ்ட் – இதில் வியப்பான விஷயம் என்னவெனில், வீட்டுப் பாங்கில் உணவளிக்கும் இது போன்ற மாமி மெஸ்களில், பட்டாளத்திலிருந்து திரும்பிய சிப்பாய் போல துவண்டிருக்கிற தோசைதான் கிடைக்கும். ஆனால்,அந்த மெஸ்ஸில், வேண்டாம் என்றாலும் ரோஸ்ட் மட்டுமே வரும். மதியம் ஆபீஸ் பக்கத்தில் ஸ்பெஷல் தயிரோடு  ஓட்டல் சாப்பாடு. இரவு திரும்ப மாமி மெஸ் ரோஸ்ட். ஈரோட்டிலிருந்து மாற்றலாகி மெட்ராஸ் போவதற்குள், அவனுக்கு மிகவும் பிடித்த முறுகலான தோசை மீதே வெறுப்பு வந்துவிடும் அளவுக்கு இரண்டு வேளையும் பேப்பர் ரோஸ்ட் வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தது.

என்னய்யா மெஸ் இது. போவும்போது, தகடாட்டம் பட்டையா வருமோனு பயப்படவேண்டிய அளவுக்கு மெல்லிசா தோசை வாக்கறாங்க உங்க ஊர்ல, என்று அறைவாசிகளிடம் அங்கலாய்க்கிற அளவிற்கு ஆகிவிட்டிருந்தான்.

அவர்களோ, சார் செம காமெடியா பேசறாரில்லே, என விதந்து, சினிமாவுக்கு வசனமெழுதப் போனா நிச்சயமா பெரியாளா ஆகிடுவாரு என்று அவன் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார்கள்.

இந்த அன்றாடத்தின் சலிப்பை, உள்ளார்ந்த புகைச்சலைக் கதையாக எழுதவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. சரியான சம்பவமாக மாட்டாமல் எப்படி எழுதுவது என்று பிடிபடவில்லை. இதைத்தான் ஜானகிராமன் கதை உட்காருவது என்று சொல்கிறாரோ என்று தோன்றிற்று. சலிப்பை சுவாரசியமாக எதை வைத்து எப்படி எழுதுவது என்று மனம் ஓயாமல் உருட்டிக்கொண்டே இருந்தது.

அந்த ரொட்டீனுக்கு இடையில் கொஞ்சம் ஆறுதலாகவும் சமயத்தில் எரிச்சலூட்டும்படியாகவும் இருந்தது தேவிபாரதிதான். அவன் எப்படி வந்து அறிமுகப்படுத்திக்கொண்டான் என்பதே நினைவில் பதியாதபடிக்கு சுந்தர ராமசாமி சொல்வதைப்போல ‘புகைமூட்டமாக’ இருந்தது.

அவன் ஆபீஸுக்குதான் தேடி வந்திருக்கவேண்டும். ராஜசேகரன் என்கிற தேவிபாரதி பாவமாய் அவனைவிடவும் ஒல்லியாய் இருந்தான். அவனை இன்னும் நோஞ்சானாய்க் காட்டியது, அவன் நிறமும் ஒட்டிய தேகமுமாய்த்தான் இருக்கவேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!