ரோஷனாரா பேகம். ‘குங்குமப் பொட்டின் மங்கலம்’ என்னும் சூப்பர்ஹிட் பாடலை எழுதியவர். முதல் இஸ்லாமியப் பெண் பாடலாசிரியர். 1968-ல் வெளியான ‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரண்டு பிற்கால முதல்வர்கள் நடித்திருந்தார்கள். கோயம்பத்தூரில் இருந்து சென்னை வந்து இவர் எழுதியது இந்த ஒரு பாடல்தான். வெற்றிகரமான அறிமுகமாக இருந்தாலும் தொடர்ந்து அவர் பாடல்கள் எழுதாததன் காரணம் தெரியவில்லை. இவரது பாடல் வெளியானதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே இறந்து போன டி.ஆர்.ராஜலஷ்மி தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். இவர் இயக்கிய ‘மிஸ் கமலா’ என்ற படம் 1936-ல் வெளியானது. நாடகத்தில் நடித்து பிறகு திரைப்படங்களிலும் நடித்தவர். முதல் பேசும் படமான காளிதாஸில் நடித்துள்ளார்.
இதைப் படித்தீர்களா?
அத்தியாயம் ஒன்று தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே...
உக்கிரமாக அரசியல் பேசுகிறோம். தீவிரமாக சமூகப் பிரச்னைகளைப் பேசுகிறோம். சாதி, மதம், சநாதனம் அது இதுவென்று ஒவ்வொரு நாளும் விவாதம் செய்ய விதவிதமாக...
Add Comment