“வர வர எனக்கு இந்தக் கொத்தடிமை வாழ்க்கை வெறுத்தே போச்சும்மா! அதனாலதான் விவாகரத்து வாங்கி விடுதலையாயிர்லாம்னு பாக்கறேன்” என்றாள் மேனகா.
“உங்களுக்கு பாரமா, வாழாவெட்டியா அங்க வந்து உக்காந்துக்குவேன்னு நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். டிகிரி முடிச்சுட்டு இத்தனை காலம் இங்க கொத்தடிமை வேலைதான செஞ்சுட்டிருந்தேன்! வெளிய போயி வேலை தேடுனா, என்னோட டிகிரிக்கு ஏத்த வேலை கெடைக்குலீன்னாலும், கடை கண்ணிகள்ல சேல்ஸ் உமன் வேலையோ, ஹோட்டல்கள்ல சமையல் வேலையோ கெடைக்காமயா போயிரும்? அப்புடியே இல்லீன்னாலும், எங்காவது ஓடிப்போயிக் கூலி வேலையாவது செஞ்சு பொழைச்சுக்கலாம்னு இருக்குது. அதைப் பத்தி ஃபோன்ல பேசுனா செரியாகாது. நேர்ல பேசலாம்னுதான் உன்னை வர வெச்சேன்” எனவும் சொன்னாள்.
அனுபவோபதேசம்! செம!