Home » நின்று கொல்லும் நீதி
குற்றம்

நின்று கொல்லும் நீதி

பன்னிரண்டு வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் லக்னோ ஷாஜஹான்பூர் நீதிமன்றம் விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் முப்பதாண்டுகளுக்குப் பிறகு ஆதாரங்களுடன் வழக்குத் தொடுத்து தண்டனை பெற்றுத் தந்துள்ளார்.

1994-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் அந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுமி அவளுடைய அக்கா வீட்டில் வளர்ந்து வந்தாள். அன்று அவளுடைய அக்காவும் அக்காவின் கணவரும் வெளியே சென்றிருந்தனர். அப்போது அக்காவின் கணவரைத் தேடி அவருடைய நண்பர்கள் இருவர் வந்தனர். இருவரும் சகோதரர்கள். இருபத்திரண்டு மற்றும் இருபத்தைந்து வயது இளைஞர்கள். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து இருவரும் அந்தச் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அந்த சிறுமிக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ தவறாக நடக்கிறது என்பதை மட்டும் உணர்ந்த அந்தச் சிறுமி பயந்து தப்பியோட முயற்சி செய்திருக்கிறாள்.

இருவரும் அந்தச் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளனர். இதை யாரிடமாவது சொன்னால் உன்னுடைய அக்காவும் அக்காவின் கணவரும் உன்னை வீட்டை விட்டுத் துரத்திவிடுவார்கள் என்று மிரட்டியுள்ளனர். அவளுடைய அக்காவும் அக்காவின் கணவரும் வீட்டில் இல்லாத நேரத்தைத் தெரிந்து கொண்டு தொடர்ந்து மேலும் சில முறை அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!