நமீபியாவின் முதல் பெண் அதிபராகப் பதவியேற்றிருக்கிறார் நெடும்போ நந்தி தைத்வா. கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஐம்பத்தேழு சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றிருக்கிறார் நெடும்போ. எதிர்த்துப் போட்டியிட்ட பண்டுலேனி இடுலாவால் இருபத்தாறு சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இருண்ட கண்டம்...
Author - காயத்ரி. ஒய்
அறியப்படவேண்டிய, கொண்டாடப்படவேண்டிய சென்ற நூற்றாண்டுப் பெண் படைப்பாளிகள். அவர்களை விரிவாக அறிமுகப்படுத்துவதுதான் நாயகி நிகழ்ச்சியின் நோக்கம். இது, ஒருநாள் கருத்தரங்காக மயிலாப்பூரிலிருக்கும் கவிக்கோ மன்றத்தில் சென்ற சனிக்கிழமை (22, மார்ச்) நடந்தது. தமிழின் முதல் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம்...
லக்சம்பர்க் நாட்டு இளவரசர் இருபத்திரண்டு வயதில் மரணமடைந்திருக்கிறார். காரணம், குணப்படுத்தமுடியாத அரியவகை மரபியல் நோய். ஐரோப்பாவில், பிரான்ஸுக்கு அருகில் அமைந்துள்ள குட்டி நாடு லக்சம்பர்க். உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. இங்கிலாந்தைப் போலவே இங்கும் அரச குடும்பம் உண்டு. முடியாட்சியுடன் கூடிய...
தாய்மொழி, ஆங்கிலத்துடன் மூன்றாவதாக ஓர் இந்திய மொழியையும் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்பதுதான் மும்மொழிக் கொள்கை. அது எப்போதும் போலத் தற்போதும் விவாதத்துக்குரிய விஷயமாகியிருக்கிறது. ‘ஏன் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறீர்கள்? குழந்தைகள் மொழிகளை எளிதாகக் கற்றுக் கொள்வர். மூன்று...
கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டு சுமார் இருபத்தைந்து வருடங்களாகின்றன. ஆனால் இந்தியாவில் தங்கத்துக்கான தேவையோ, வாங்குவதற்கான காரணங்களோ இன்றுவரை குறைந்து போய்விடவில்லை. விதவிதமான ஆபரணங்கள் வாங்கிப் போடுவதும், தங்கத்தில் முதலீடு செய்வதும், தங்கத்தை வாங்கிக் கொண்டு ஐந்து நொடிகளில் பணம் கொடுக்கும்...
மேகாலயாவின் ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த அம்மா – மகள் இணை, ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் இருபது லட்ச ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளனர். சோனி லிவ் நடத்தும் ரியலிட்டி ஷோ ஷார்க் டேங்க். வியாபாரத்தில் உச்சம் தொட்டவர்களை ஷார்க் என்று செல்லமாக அழைப்பார்கள். ஷார்க் டேங்க், என்றால் புதுப் புது வியாபார...
முற்றிலும் கணினி மயமாக மாற்றப்பட்ட கல்விக் கூடங்களில், மீண்டும் அச்சடித்தப் புத்தகங்களைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது ஸ்வீடன் அரசு. 2009ஆம் ஆண்டு, பிற நாடுகளுக்கு முன்னோடியாக மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தங்கள் கல்விக் கூடங்களில் டிஜிட்டல் திரையைக் கொண்டு வந்தது ஸ்வீடன். பதினைந்து ஆண்டுகளுக்குப்...
‘நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் வாரத்தில் தொண்ணூறு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். எனக்கு உங்களையெல்லாம் ஞாயிற்றுக் கிழமை வேலை பார்க்க வைக்க முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. நான் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் வேலை பார்க்கிறேன். வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது? எவ்வளவு நேரம்...
புலம்பெயர்ந்தோர் தினத்தில் அவர்களுக்கெனத் தனித்துவமான ரயில் பயணத்தைத் தொடங்கிவைத்தார் இந்தியப் பிரதமர். பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ். பிரவாசி என்றால் புலம்பெயர்ந்தவர்கள் என்று பொருள். புலம்பெயர்ந்தவர்களுக்காக சிறப்பு ரயில் ஒன்று தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இந்த ரயில் தனது முதல்...
இப்போதெல்லாம் இசையும் பாடல்களும் திறன்பேசிச் செயலிகள் மூலமே கேட்கிறோம். இதன் மூலம் நாம் பெற்றதும் இழந்ததும் என்னவென்று யோசித்திருப்போமா? வெளியேற முடியாத இசைச் சுழலில் நாம் சிக்கியிருப்பதாக எச்சரிக்கிறார்கள் சில இசை ஆர்வலர்கள். முன்பு வானொலியில் நேயர் விருப்பம் என்று ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். பல...